Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
ரஜினியின் ரசிகையாக ஜோதிகா

sooriyan gossip - ரஜினியின் ரசிகையாக ஜோதிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views
தனது துரு துரு நடிப்பினால் தனக்கென்று ஒரு இடம்பிடித்துக்கொண்ட நடிகையும் ,சூர்யாவின் காதல் மனைவியுமான ஜோதிகா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரஜினியின் ரசிகையாக நடிக்கவுள்ளார்.

மோகன்லால் எனும் மலையாள திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையான ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை குடும்பப் பின்னணியில் சொன்ன இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்லவிதமான வரவேற்பு அமோகமாக கிடைத்தது.இந்த திரைப்படத்தில் மோகன்லாலின் ரசிகையாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அவரது நடிப்பும் அனைவராலும் வரவேற்கத்தக்கதாக பாராட்டுக்களையும் பெற்றது.


மஞ்சுவாரியர் நடித்த மோகன்லால் எனும் இந்த மலையாள திரைப்படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

தமிழில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகாவை மாற்றவிருக்கிறார்கள். குறித்த திரைப்படத்திற்கு ‘ரஜினி செல்வி’ என்ற தலைப்பு வைக்கலாமென்று திட்டமிட்டுள்ளனர்..

தற்போது ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா ஜுன் மாதம் முதல் நடிக்கவிருக்கிறார்.இந்த ஹிந்தி திரைப்படம் முடிந்ததும் ‘ரஜினி செல்வி’எனும் திரைப்படம் ஆரம்பிக்கப்படும். ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’எனும் படத்தில் நடித்துவருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top