Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
நாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்

Sooriyan Gossip - நாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views
America  ல்  நடைபெறும் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு, இலங்கை பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட  பெருமைக்குரிய 4 மாணவர்கள் அமெரிக்காவின் ''Venezuela '' நகருக்கு பயணமாகின்றார்கள். 
 
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி  எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை ''Venezuela ''  நகரில் நடைபெறவுள்ளது.

இந்த பிரமாண்ட கண்காட்ச்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சோந்த 1,700 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்கள் தொடர்ச்சியாக  குறித்த  கண்காட்சியில் கலந்து கொள்வதுடன், போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிகளையும் சுவீகரித்துள்ளனர். 
 
இதனிடையே இலங்கை பொறியியலாளர் கல்வியகம், போட்டிகளை நடாத்தி, வெற்றி பெறுகின்ற மாணவர்களை வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்கிறது.
 
இந்த நிலையில் இந்த வருடத்தில் கண்டி சென் அன்தனிஸ் கல்லூரியை சேர்ந்த மாணவன் கிம்ஹான் விஜேவர்தன, மற்றும்  கஜிந்து பண்டார போன்ற மாணவர்களும், கந்தானை - டெமகினோன் கல்லூரியை சேர்ந்த சுபுன் சில்வா, அத்துடன் புத்தளம் ஆனந்த தேசிய கல்லூரியின் மாணவன் ருமல் இந்துவர போன்ற  மாணவர்கள் நால்வரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
 
அமெரிக்கா பயணமாகும் குறித்த மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். 
 
ஐந்து நாட்கள் நடைபெறும் கண்காட்சிக்கு  குறித்த நான்கு மாணவர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி,  இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு  பயணமாகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top