Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
''ஒரு தடைவை சொன்னால் நூறு தடைவை சொன்ன மாதிரி'' - இந்த வசனத்தின் சொந்தக்காரர் எழுத்தாளர் பாலகுமார் காலமானார்.

balakumaran death - ''ஒரு தடைவை சொன்னால் நூறு தடைவை சொன்ன மாதிரி'' - இந்த வசனத்தின் சொந்தக்காரர் எழுத்தாளர் பாலகுமார் காலமானார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

729 Views
எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை கொண்ட புகழ்  பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் தனது 71வது  வயதில்    காலமாகியுள்ளார்
முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக  சென்னை -ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். 
 
இவர் , தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  பழமார்நேரியில் 1946  ம்  ஆண்டு ஜூலை 5-ம் தேதி பிறந்தார். 
 
இவரின் தந்தை  தமிழாசிரியர். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969-ம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் வேலையில் இணைத்துள்ளார்.  அப்போதே  கவிதைகள் எழுத ஆரம்பித்து, தான் எழுதிய கவிதைகளை கணையாழி  இதழில் பிரசுரிக்க அனுப்பி வைத்து, அவை அன்றைய நாட்களில் வெளிவந்தன. 
 
அதன் பின்னர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
 
பின்னைய நாட்களில் தனது தகுதிகளை உயர்த்திய எழுத்தாளர்  பாலகுமாரன், திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்தார்.

இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். 'சிந்து பைரவி', 'புன்னகைமன்னன்' முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கியிருந்தார்.

பின்னாட்களில் சினிமா வசனகர்த்தாவாகவும் தன் முத்திரை பதித்த ஒருவர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தன்னுடைய அவதாரத்தை தரித்தார். அதையடுத்து 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்' முதலான ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார் பாலகுமாரன்.

சூரியனின் ஆழ்ந்த இரங்கல் + அஞ்சலி.

எழுத்துச் சித்தர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் சாகாவரம் பெற்று நிற்கும்.

 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top