பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இளம் நடிகைகளில், சாய் பல்லவிக்கு தனியானதொரு இடம் உள்ளது.
இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2 படத்தில் ஒரு ஆட்டோ சாரதியாக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, ‘கல்லூரி’ வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.