Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
இப்படி ஒரு காரணமா....??? - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.

Sooriyan Gossip - இப்படி ஒரு காரணமா....??? - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,370 Views
திரைத்துறைக்குள் சுலபமாகக் கால்பதிக்க வாரிசு நடிகர்கள் என்ற அடையாளம் போதும். ஆனால் சினிமாவில் தம்மை நிலை நிறுத்த, துறைசார் திறமையும், கடின உழைப்பும் இல்லையென்றால் யாரென்றாலும்  காணாமல் போய்விடுவார்கள். அதைவிட ரசிகர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுவதை பொறுத்தும் வாரிசு நடிகர்களின் அதிர்ஷ்டம் அமைந்து விடுகின்றது.
திரைத்துறைப் பின்னணி கொண்டு அரிதாரம் பூச வந்த வாரிசு நடிகர்கள் வரிசையில், தமிழ்த் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான அமரர் முரளியின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்குள் சுலபமாக உள்நுழைந்தவர் அதர்வா. சுலபமாக வந்து விட்டாலும், தன்னை வருத்தி நடிப்பில் தேர்ச்சி பெற மும்முரமாக உழைக்கும் இவர் தந்தையின் பெயரை காப்பாற்றி விடும் தனயனாக உயர்ந்துவிட முயன்றுகொண்டிருக்கிறார். இவரது முயற்சிக்கும், வளர்ச்சிக்கும் இயக்குனர் பாலாவின் பட்டை தீட்டாலும் பெரும் பங்கை பெற்றிருக்கின்றது.
 
அதர்வாவின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி அவரது திறமையை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கும் நிலையில், தற்போது  "செம போத ஆகாதே" மற்றும் "இமைக்கா நொடிகள்" ஆகிய இரண்டு புதிய படங்களில் நடித்து முடித்து அவை வெளியீட்டுக்குத் தயார்நிலையில் உள்ளன. அதில் "செம போத ஆகாதே" திரைப்படம்  மே மாதம் 18-ஆம் தேதி (நாளை) வெளிவரவிருப்பதாக படக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், "செம போத ஆகாதே" படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க,  படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென  படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணம், இந்தப் படத்துக்கு முன்னதாக தயாரான பல படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருப்பதால் அவற்றை வெளியிட திரையரங்கங்களைக் கொடுக்கும் நோக்கில் "செம போத ஆகாதே" படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்க   யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கின்றது "செம போத  ஆகாதே".   பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படம் இருவரும் இணையும் இரண்டாவது திரைப்படம். "பானா காத்தாடி" படத்திற்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
 
இது இப்படியிருக்க, எதிர்வரும் மே 25-ஆம் திகதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றார்கள் தயாரிப்புத் தரப்பினர்.   ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top