Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
பிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தின் நினைக்க முடியாத சுவாரஸ்யங்கள் - ஊடகவியலார்களின் நுணுக்கமான செய்தி சேகரிப்பு !!

Sooriyan Gossip - பிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தின் நினைக்க முடியாத சுவாரஸ்யங்கள் - ஊடகவியலார்களின் நுணுக்கமான செய்தி சேகரிப்பு !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,129 Views
பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, நடிகை மெகன் மார்கல் திருமணம் லண்டனில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 

இந்த அரச குடும்பத்து  திருமணம் தொடர்பான செய்தியை சேகரிக்க உலகம் முழுவதும் இருந்து  பல ஊடகவியலாளர்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர். 
 
ஊடகங்களை பொறுத்த வரையில் செய்திகளை முந்திக்கொண்டு உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த    வேண்டும். இந்த நிலையில் இளவரசர் ஹரியின் அருகே நின்று செய்தி சேகரிப்பது இந்த திருமண நிகழ்வில் நடக்காத காரியம். 
 
எனவே ஹரியும் மெகன் மார்கலும் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய செவித் திறன் குன்றியோருக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்தப்படும்  ''Lip  Reading '' (உதட்டு அசைவை வைத்து என்ன பேசுகிறார்கள் என்பதை அறிதல் ) முறையை முன்னணி ஊடகங்கள் சில பயன்படுத்தி, தங்களது செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். 
 
சரியான முறையில் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூடவுள்ள மெகன் மார்கல் ஆகியோரின் கருத்து பரிமாற்றங்களை அவதானிக்க குறித்த முன்னணி ஊடகங்களினால் ''Lip  Reader ''’ நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஹரியும் மெகன் மார்கலும் என்ன பேசுகிறார்கள் என்பதை அப்படியே பதிவு செய்து, அவற்றை ஊடகங்களில் உடனுக்குடன் அறிவித்துக்கொண்டு இருந்தார்கள். 
 
இந்த Lip Reading  நிபுணர்கள், புதுமண தம்பதியின் உதட்டு அசைவுகளை உன்னிப்பாக கண்காணித்து செய்தி சேகரித்தார். அவரது வர்ணனையின் சுருக்கம். ‘நீ (மெகன் மார்கல்) மிகவும் அழகாக இருக்கிறாய்’ என்று ஹரி கூறியதும் அதற்கு மார்கல், ‘'நன்றி’' என்று புன்முறுவல் புரிந்தார். 
 
திருமணம் முடிந்து வெளியே வந்ததும், '‘இப்போதே உற்சாக பானம் அருந்த வேண்டும் போல் இருக்கிறது’ என்று ஹரி கூறியதும், ‘என் கண்களால் நம்ப முடியவில்லை’ என்று  புதுமணத் தம்பதிகளை காணவந்த மக்களை பார்த்து  மெகன் மார்கல் கூறுவதும் ''Lip  Reading '' நிபுணர்களால் அறியப்பட்டுள்ளது. 
 
மற்றுமொரு ஊடகத்தின் லிப் ரீடர் நிபுணர், இளவரசர் ஹாரியும் அவரது அண்ணன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையில் ஒன்றாக நடந்து வந்தபோது அவர்களின் உதட்டு அசைவை கண்காணித்து செய்தி எழுதியுள்ளார். 
 
அவரது பதிவுகளின் சுருக்கம்: இளவரசர் ஹரி கூறுகிறார் ''எனது பேன்ட் மிகவும் இறுக்கமாக உள்ளது'' என்று, அதற்கு இளவரசர் வில்லியம் மென்மையாக புன்னகைத்தார். அத்துடன்  ''அவள் (மெகன் மார்கல்) வந்துவிட்டாளா’' என்று ஹரி கேட்க்க, ‘இல்லை’ என்று வில்லியம் பதிலளித்தார். 
 
இவ்வாறு அநேக ஊடகங்களினால் இதேபோல பல்வேறு லிப் ரீடர்களை பயன்படுத்தி திருமண விழாவில் செய்தி சேகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top