Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
ரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.!!

Sooriyan Gossip - ரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,744 Views
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, ஊடக வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்புவதன் மூலம் மக்களிடம் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வது பிரபலங்களின் இயல்பு. சினிமாவில் தொடங்கி அரசியல், ஆன்மிகம் எனப் பலதரப்பட்ட  துறை சார்ந்தவர்களும் இதில் உள்ளடக்கம். இந்தியாவைப் பொறுத்தவரையில், சினிமா, அரசியல் இரண்டுக்குமே நெருக்கமான தொடர்பு இருக்கும் நிலையில், எதையாவது எழுந்தமானமாகப் பேசி மக்களிடம் வாங்கி கட்டிக்கொள்பவர்கள் இந்த இரு தரப்பினருமே. 
இந்திய தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த நிமிடம் வரைக்கும் எல்லோரதும் பேசுபொருளாக உள்ள விஷயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை. அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடக்கம் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட மரணங்கள் தந்த வலி என வேதனையில் மக்கள் தவித்திருக்கும்வேளையில், நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை கார்த்திகா ஆகியோர் தமது  டுவிட்டர் பக்கங்களில் தரவேற்றம் செய்த பதிவுகளினால்  தமிழக மக்களின் எதிர்ப்பலைக்கு முகம் கொடுத்துள்ளனர். 
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையில், குறித்த குழப்பநிலைக்குக் காரணமான காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சிக்கியதால் ஏற்பட்ட இரத்தக் காயத்துடன் கூடிய காணொளி ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், காவல்துறைக்கு சார்பான கருத்தையும் பதிவு செய்திருந்தார். 
 
காயத்ரி ரகுராமின் பதிவில் "போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   
 
இதேவேளை நடிகை கார்த்திகாவின் டுவிட்டர் பதிவில்  “தூத்துக்குடியில் சில கலகக்காரக் குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று கூறியுள்ளமையும் மக்களை பெரும் கோபத்துக்குள் தள்ளியுள்ளது. கார்த்திகாவின் இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்களே எதிர்கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். "நீங்கள் இந்தியஉளவுத்துறையில் பணியாற்றுகிறீர்களா...?" "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா..?"  "தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...?" போன்ற கேள்விகளைக் கேட்டு கருத்துப் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top