Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
சிதைந்து போகும் முதல்வர் கனவு - சிக்கித் தவிக்கும் 'சூப்பர்ஸ்டார்' !!

Sooriyan Gossip - சிதைந்து போகும் முதல்வர் கனவு - சிக்கித் தவிக்கும் 'சூப்பர்ஸ்டார்' !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,107 Views
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் தூத்துக்குடியில் வைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான மக்களின் போராட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் பொதுமக்களின் எதிர்ப்பலைக்கு முகம் கொடுத்துள்ளதால், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு தமிழக காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
"மக்களின் போராட்டம் கூடாது. இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றால் தமிழகத்தில் முதலீடு செய்ய யாருமே வர மாட்டார்கள். தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம்.." என ரஜினி கூறிய கருத்துக்களுக்கு பொதுமக்கள் குமுறிப்போயுள்ள நிலையில், பல்வேறு சமூக அமைப்புகளும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதாலேயே ரஜினிகாந்தின் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
நேற்றையதினம் தூத்துக்குடி சென்று, அங்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினி  ஆறுதல் கூறியதோடு, துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாவும்    காயமடைந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாவும்   வழங்கியிருந்தார். அதேவேளை, ரஜினிகாந்திற்கு பாதுகாப்பு வழங்க தூத்துக்குடி அரச மருத்துவமனையிலும், நேற்றையதினம் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. 
 
காயமடைந்த பொதுமக்களை சந்தித்ததன் பின்னர், ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,  "மக்கள் தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும்,  போராட்டம் என்பது தீர்வாகாது. உளவுத்துறையின் தோல்வியே  தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழப்புக்கு காரணம்.  சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே நுழைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினார்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்று  ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதேபோன்று  நடந்தது. சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க  வேண்டும். சமூக விரோதிகளால் புனிதமான போராட்டங்கள் ரத்தக் காயங்களுடன் முடிகிறது, துப்பாக்கிச்சூடு குறித்து தனிநபர் கொண்ட  விசாரணை ஆணையத்தில் நம்பிக்கை இல்லை.." போன்ற பல கருத்துக்களையும் தெரிவித்திருந்த நிலையிலேயே மக்களின் கொதிப்பு அவர் பக்கம் திரும்பியுள்ளது. 
 
 
இது இப்படியிருக்க, ரஜிகாந்த்திற்கு எதிராக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களின் குரல்களும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன. நேற்றையதினம் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தைக் கேவலப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்துக்களுக்காக, அவருக்கெதிராக  தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யவேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன், மக்களின் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணம் சமூக விரோதிகள்  எனக் கூறும் ரஜினிகாந்த், அந்த சமூக விரோதிகளின் விவரங்களை தனிநபர் விசாரணை ஆணையத்திடம் கட்டாயம் ஆதாரத்துடன் வழங்க வேண்டும் என்றும் சரத்குமார் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top