Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
திரையுலகை வெறுத்து விலகும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் - காரணம்......?????

Sooriyan Gossip - திரையுலகை வெறுத்து விலகும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் - காரணம்......?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,879 Views
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து திரையுலகிற்கு காலடி எடுத்து வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பலர், தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக மக்களின் இதயத்தில் இடம்பிடித்திருந்தாலும், தமிழ்த் திரையுகில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று நிலைத்திருக்கும் அதிர்ஷ்டம் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கின்றது. 
 

தொலைக்காட்சியிலிருந்து திரையுலகிற்கு வந்தவர்களில் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து தானும் அரிதாரம் பூச ஆசைப்பட்டவர் மா.கா.பா. ஆனந்த். ஆசைப்பட்டது போல், ஒருவாறாக திரைத்துறைக்குள் தன்னை உள்நுழைத்துக் கொண்ட அவருக்கு, தனது இருப்பை தக்கவைக்க பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதாம்.
 
தற்போது "பஞ்சுமிட்டாய்" என்ற படத்தில் நடித்து முடித்து, எதிர்வரும் நாட்களில் அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கும் மா.கா.பா.ஆனந்த், தனது படம் பற்றி கூறும்போது..." இந்த படம் தமிழுக்கு ஒரு புது முயற்சியாக மாய யதார்த்தம் என்னும் வகையில் எடுக்கப்பட்ட படம். மனிதர்களையும் அனிமே‌ஷன்களையும் இணைத்து, ஹொலிவூட் படங்களைப்போன்று எழுதப்பட்ட ஒரு திரைக்கதை. இந்த படத்துக்கான படப்பிடிப்பை சென்னை மாநகரின் கூவப் பகுதிகளிலிருந்து திருவண்ணாமலை பிரதேசம்வரை பல்வேறுபட்ட சிரமமான சூழல்களில் படம் பிடித்தோம். பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு படம் வெளியாகிறது. ஆனால் ரசிகர்களுக்கு முழு திருப்தியை தரும் படமாக இருக்கும் என்கிறார். 
 
அத்துடன், குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கிடையேயான புரிந்துணர்வுச் சிக்கல்களைப் பற்றி இந்தக் கதை உருவாக்கப்பட்டிருப்பதால்,  படம் பார்ப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையை கதையோடு ஒன்றிணைத்துக் கொள்வார்கள். இந்தப் படத்தை பார்க்க வரும் ரசிகர்களை படம் ஏமாற்றமடைய வைக்காது என்று நம்பிக்கை கூறுகிறார் மா.கா.பா.
 
இதேவேளை, அவரது படங்கள் திரைக்கு வரும்போது பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வது பற்றி அவர் சொல்லும்போது, "இதில் என்னுடைய தவறு எதுவுமே இல்லை. எனக்கு தரப்பட்ட வேலையை சரியாக செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் குறித்த திரைப்படம் அந்த தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். சந்தைபடுத்துதல் அவரின் சூழ்நிலையைப் பொறுத்துத்தான் அமைகிறது. இங்கே ஒரு படத்தை எடுப்பதை விட, அது சரியாக ரசிகனைச் சென்றடைய பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நான் அறிமுக நிலையில் இருப்பதால் இது தொடர்கிறது என நினைக்கிறேன்.
 
அத்துடன், தொலைக்காட்சி, வெள்ளித்திரை என இரண்டிலுமே பயணிக்க ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்களிடம்  அறிவுரைகள் பெற்று, அவர்களுடன் கலந்தாலோசிக்கிறேன். அவர்களும் எல்லாத் துறைகளிலும் முயற்சிக்கச்  சொல்கிறார்கள். சினிமா என்பது இன்னமும் முழுநேர வேலையாக எனக்கு மாறவில்லை. தொலைக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகின்றேன். இருந்தும், கிடைக்கும் வாய்ப்புக்களை தெரிவு செய்து படங்களில் நடிக்கின்றேன். படங்களில் நடிக்கும்போது வரும் பிரச்சனைகளால் உண்டான மனஉளைச்சலால், சினிமாவை விட்டே ஒதுங்கிப் போய்விடலாம் என்று எண்ணிய தருணமும் உண்டு. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க நான் ஜோசிக்கவில்லை. ஆனால், நடிக்க வைக்க படக்குழுவினர் யோசித்தார்கள். கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று நான் அடம் பிடிக்கவில்லை. எந்த  வேடத்திலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன் என்று மனம் திறந்தார் மா.கா.பா.ஆனந்த்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top