Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
Hackerகளிடமிருந்து Android கைபேசிகளை பாதுகாப்பது எப்படி?

Sooriyan Gossip - Hackerகளிடமிருந்து Android கைபேசிகளை பாதுகாப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,808 Views
உலகில் கோடிக்கணக்கான நபர்கள் Android போன்களையே பயன்படுத்துவதால் ஹேக்கர்களின் குறி அவர்களை நோக்கியே உள்ளது. இதனால் Android ஸ்மார்ட்போன்கள் பயனாளிகள் சில குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதைய நவீன Technology காரணமாக உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்கள் ஹேக் செய்வது என்பது மிக எளிதான ஒன்று. ஹேக்கர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே உங்களுடைய அன்பான ஸ்மார்ட்போனை நீங்கள் ஹேக்கர்களிடம் இருந்து எப்படி பாதுகாத்து வைத்து கொள்வது என்பதை தெரிந்தே ஆகவேண்டும்.
 

உங்கள் Android ஸ்மார்ட்போன் ஹேக்கர்களிடம் சிக்கினால் என்ன ஆகும்? ஹேக்கர்கள் உங்களின் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்வார்கள்? உங்களுடைய தனிப்பட்ட டேட்டாக்கள் வங்கி கணக்குகள் விபரங்கள் மற்றும் வங்கி கணக்கில் நுழையும் யூசர்நேம் மற்றும் Password உங்களுடைய பர்சனல் டேட்டாக்களை ஹேக்கர்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அதை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம்.

அதுமட்டுமின்றி உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமையும். இருப்பினும் கவலை வேண்டாம் உங்களுடைய ஸ்மார்ட்போனை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தற்போது நாங்கள் பார்ப்போம்.

* Android போனை Hacker Proof ஆக மாற்றுவது எப்படி? எந்தவொரு பாஸ்வேர்டையும் Save செய்ய வேண்டாம்:

பெரும்பாலான Android ஸ்மார்ட்போன் பயனாளிகள் மறதி மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு பாஸ்வேர்டை சேமித்து வைக்கும் வழக்கத்தை உடையவர்களாக உள்ளனர். இது ஹேக்கர்களுக்கு மிக வசதியான ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமில்லாத அம்சங்களின் பாஸ்வேர்டுகளை சேமித்தால் கூட பரவாயில்லை ஆனால் வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கியமானவற்றின் பாஸ்வேர்டுகளை கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டாம். அது மிகவும் ஆபத்தானதாக அமையும்

* Android அளித்துள்ள செக்யூரிட்டியை பயன்படுத்துங்கள்:

ஒவ்வொரு Android போனிலும் ஒரு செக்யூரிட்டி அம்சங்கள் தரப்பட்டிருக்கும். பின் நம்பர், பாஸ்வேர்டு, பேட்டர்ன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இந்த செக்யூரிட்டி அம்சாங்கள் ஆகும். இந்த செக்யூரிட்டி சிஸ்டத்தை பயன்படுத்துவது ஒரு கூடுதல் பாதுகாப்பு என்பதை மறக்க வேண்டாம். மேலும் இந்த Password, ஹேக்கர்கள் யூகிக்காத வகையில் கொஞ்சம் கடினமாக்கி கொள்வது இன்னும் கூடுதல் பாதுகாப்பாக அமையும்.

* Third Party Appsகளை தவிர்த்துவிடுங்கள்: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை Download செய்யுங்கள்.

Third Party செயலிகளை கண்டிப்பாக Download செய்ய வேண்டாம். குறிப்பாக premium செயலிகளை இலவசமாக தருகிறோம் என்று கூறப்படும் விளம்பரங்களை நம்பி அந்த செயலிகளை Download செய்ய வேண்டாம். அந்த இலவசத்திற்கு பின்னால் என்ன அபாயம் உள்ளது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. மேலும் Third Party செயலிகளில் வைரஸ் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவ்வகை செயலிகளை மொத்தமாக தவிர்ப்பது மிகவும் நல்லது.

*செயலிகளை review செய்யுங்கள்:

நீங்கள் Download செய்த செயலிகள் அப்டேட் ஆகும் போது கண்ணை மூடிக்கொண்டு அப்டேட் செய்ய வேண்டாம். அதில் உள்ள Conditionகளை படித்து பாருங்கள். மேலும் ஒவ்வொரு செயலியையும் அப்டேட் செய்யும்போது அதற்கு Review அளியுங்கள். மேலும் சந்தேகப்படும்படி ஏதாவது செயலிகள் இருந்தால் அந்த செயலிகளை உடனே UnInstall செய்துவிடுங்கள்.

* Data Encryption பயன்படுத்துங்கள் Data Encryption என்பது ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சம் ஆகும்.

இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் Enable செய்து வைத்து கொள்ளுங்கள். இது கூடுதலான பாதுகாப்பை அளிக்கும். மேலும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் Pass Key பயன்படுத்தி கொள்ளுங்கள்.

*Software Update இல் உள்ளதா?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Software ஐ அதன் தயாரிப்பாளர்கள் அப்டேட் செய்திருந்தால் உடனே அதனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்டேட்டில் உள்ள புதிய அம்சங்கள் கூடுதல் பாதுகாப்பை அளிப்பது மட்டுமின்றி ஸ்மார்ட்போனை முடக்கும் மேலும் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளும் கிடைகும். எனவே Software களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்வதில் கவனம் தேவை.

மேற்கண்ட அனைத்து வழிகளையும் Android ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடைபிடித்து வந்தால் உங்களை ஹேக்கர்கள் நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. கடைசியாக இன்னும் ஒரு விஷயம். தேவையில்லாத இணையதளங்களை Phone மூலம் Open செய்ய வேண்டாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top