Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
நடிப்புக்கு முழுக்குப் போடும் சிம்பு - காணொளியில் தெரிவிப்பு.!!

Sooriyan Gossip - நடிப்புக்கு முழுக்குப் போடும் சிம்பு - காணொளியில் தெரிவிப்பு.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,658 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, விரைவில் திரை காணவிருக்கின்றது "செக்கச் சிவந்த வானம்". பல 'சூப்பர்ஹிட்' படங்களை தமிழுக்குத் தந்த பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை சேர்பியா நாட்டில் நடத்தி முடித்திருக்கின்றது படக்குழு.
 

விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்தசாமி, அருண் விஜய் ஆகியோர்  ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் இந்தப் படம், அவரவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், சிம்பு நடிக்கும் காட்சிகளே செர்பியாவில் படமாக்கப்பட்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுக்கு வந்துள்ளதோடு, இது தொடர்பாக நடிகர் சிம்பு காணொளியொன்றை  வெளியிட்டுள்ளார்.
 
சிம்புவின் குறித்த காணொளியில் "செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குனர்  மணிரத்னத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. மணிரத்னத்தின் 'அஞ்சலி' படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன். 
 
ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நான் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் ஏற்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. 
 
நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். சினிமாவை விட வேறு எதுவும் எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் எனக்கு இல்லை. 
 
என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. ஒரு விஷயம் என்னால் தான் தப்பாக உள்ளது என்றால், நான் மாற்றிக் கொள்வேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
 
இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை" என்று கூறி காணொளியை முடித்திருக்கிறார் நடிகர் சிம்பு. 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top