Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
கசப்பான விடயங்களை மனதில் இருந்து அழிக்க முடியும் - சந்தோசம் தரும் ஆராய்ச்சி முடிவு

Sooriyan Gossip - கசப்பான விடயங்களை மனதில் இருந்து அழிக்க முடியும் - சந்தோசம் தரும் ஆராய்ச்சி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,717 Views
நமது மனதில் உள்ள வேதனை தரும் அல்லது வேண்டப்படாத நினைவுகளை அகற்ற முடியும் என்று, புதிய தகவல் ஒன்று ஆராய்ச்சி  மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 
 

எங்களுடைய வாழ்வில் நாம் தினமும் உள்ள 24  மணி நேரத்தில் பிடித்த, பிடிக்காத , ஆசைப்படக்கூடிய, அழிக்க முடியாத, பெரும் பாதிப்பை உண்டுபண்ணிய, ஏக்கத்தை தந்த, தவிர்க்க வேண்டிய என்று நிறைய விடயங்களை கடந்து வருகிறோம். 
 
இவற்றில் சில விடயங்கள் எமது வாழ்வில் நாம் மறுபடியும் மீட்டிப்பார்க்கவே வேண்டாம் என்று எண்ணத் தோன்றும் சம்பவங்களாக இருக்கின்றன. 
 
இந்த மாதிரியான நினைவுகளை  எப்படி அளிப்பது? - இதில் இருந்து மீள்வதற்கு மாற்று வழியே இல்லையா என்ற நிலையில் பெருமளவானவர்க்ள உள்ளார்கள்.   
 
சில சம்பவங்கள் மிகவும் பயங்கரமான அச்சமூட்டும் உணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதுண்டு.
 
இவற்றுக்கெல்லாம் தீர்வாக எமக்கு  பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் பதிவுகள் மனித மூளையில் 
எந்த பகுதியில் சேமிக்கப்படுகின்றன? என்ற ஆராய்ச்சியில்  ஸ்விட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இந்த ஆராய்ச்சிக்காக  எலிகளை பயன்படுத்திய  அவர்கள், தமது ஆராய்ச்சியின் முடிவை அறிவித்துள்ளனர். 
 
இதன்மூலம், மூளையின் ‘டென்ட்டேட் கய்ரஸ்’  dentate gyrus எனப்படும் நியூரான்களின் தொடர் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதன் வாயிலாக நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் நம்மில் இருந்து நீக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். 
 
இந்த அரிய தகவலை குறித்த ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஜோஹான்னெஸ் கிராஃப் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆகவே நமக்கு வேண்டப்படாத சம்பவங்களை  நம்மில் இருந்து நீக்குவதற்கு  பொருத்தமான  கருவியை உருவாக்கும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் விரைவில் வெற்றிபெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top