Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
துப்பாக்கிகள் தொடர்பில் ஐநா சபை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!

Sooriyan Gossip - துப்பாக்கிகள் தொடர்பில் ஐநா சபை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

780 Views
உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளதாக  ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை சார்பில் பாதுகாப்புத் துறை நிபுணர் ஆரோன் கார்ப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, உலகளாவிய அளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்களிடம் மட்டும் 85.7 கோடி துப்பாக்கிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் 13.3 கோடி துப்பாக்கிகளையும் காவற்துறையினர் 2.27 கோடி துப்பாக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் அமெரிக்கா மக்களில் அதிகமானோர் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் துப்பாக்கி பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றனர். அமெரிக்காவில் 39.3 கோடி மக்களிடம் துப்பாக்கி உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியர்களிடம் சுமார் 7.11 கோடி துப்பாக்கிகள் உள்ளன. சீனர்களிடம் 4.97 கோடி துப்பாக்கிகளும் , பாகிஸ்தானியர்களிடம் 4.39 கோடி துப்பாக்கிகளும், ரஷ்யர்களிடம் 1.76 கோடி துப்பாக்கிகளும் உள்ளன.

எந்தெந்த நாடுகளின் ராணுவத்தில் துப்பாக்கிகள் அதிகம் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது.

சீனா, வடகொரியா, உக்ரைன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது.

இதே போன்று எந்த நாட்டு காவல்துறையினரிடம் அதிக துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனா, இந்தியா, எகிப்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top