ஐதரபாத்தில் பிரபல ஜோதிட வல்லுநர் கியானேஷ்வர் சினிமாவில் இருந்து சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவார்கள் என்றும், ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்றும் கணித்து கூறியவர்.
இவர் இப்போது நடிகை ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராவார் எனவும் அதற்கு அவரது பெயரை ரோகினி என மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த் எனவும் அவர் கூறியுள்ளார்.