வெளிநாடுகளில் அதிக காலம் இருப்பதாகவும், இதனால் 355 கோடி இந்திய ரூபாய்கள் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன .
இதற்குமுன் இருந்த பிரதமர்களைக் காட்டிலும், அதிகமான வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற தரவு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி, 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்துக்காக 355 கோடி இந்திய ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பீமப்பா காடட் என்பவரே இந்த தகவல்களை வெளிகொண்டுவந்துள்ளார்.
பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அதிகபட்சமாக பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் கனடா நாடுகளுக்கு பயணித்திருந்தார்.
இந்தப் பயணத்துக்கு மோடி செல்லும் போது, 31 கோடியே, 25 லட்சத்து 78 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி 9 நாட்கள் வெளிநாட்டில் இருந்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு, பூடான் நாட்டுக்குப் சென்றபோது அவரின் குறைந்தபட்ச செலவு 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 இந்திய ரூபாய்கள் என்ற கணக்கிடப்பட்டுள்ளது. இது மோடியின் ஒருநாள் செலவு என்பது குறிப்பிடத்தக்கது.