Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...

Cinema - பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,828 Views
ஹொலிவுட் தொடக்கம் கோடம்பாக்கம் வரைக்கும் அடுத்தடுத்து கிளம்பிக்கொண்டிருக்கும் விடயம் தான் நடிகர்களுக்கான பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள். 

மேலைத்தேய கலாச்சாரத்தை பொறுத்தவரைக்கும் பாலியல் சார்ந்த விடயங்கள், சமூக ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றில் நம் நாட்டைப் போன்றல்லாது தளர்வுபோக்கு இருக்கும் நிலையிலும் ஹொலிவூட்டில் பாலியல் நெருக்கடிகளை தாம் எதிர்கொண்டமை தொடர்பில் இன்னமும் நடிகைகளின் முறைப்பாடுகள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.

இது இப்படியிருக்க, தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரைக்கும், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த திரையுலகம் சார்ந்தவர்களின் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மலையாளத் திரையுலகிலும் தாம் எதிர்கொண்ட பாலியல் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர் மல்லுவூட் நடிகைகள்.

இந்த நிலையில், 'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகிலும் இதன் எதிரொலிகள் ஒழிக்க ஆரம்பித்திருக்கின்றன. தாம் எதிர்கொண்ட பாலியல் நெருக்கடிகள் தொடர்பில் கதைக்க பிரபல்யமடைந்த நடிகைகளே வாய் திறக்க யோசிக்கும் நிலையில், வளர்ந்து வரும் நடிகை ஒருவர், தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

பொலிவூட்டில் நடிகர் தனுஷ் நடித்த "ராஞ்சனா" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஸ்வரா பாஸ்கர். அவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து கூறுகையில், ‘‘பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். நடிகைகள் விருப்பம் என்ன என்பதை கேட்ட பிறகே அவர்களை அணுக வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை தொந்தரவு செய்யக்கூடாது’’ என தனக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வை பொது வெளியில் பகிர்ந்திருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top