Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
கவர்ச்சியா....? முத்தக் காட்சியா....? அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.

Cinema - கவர்ச்சியா....? முத்தக் காட்சியா....? அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,697 Views
"நடிகையர் திலகம்" திரைப்படத்தில் தன் அபார நடிப்பை வெளிப்படுத்தி, கோடம்பாக்கத் திரைப் பிரபலங்கள் அனைவரினதும் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படி மகிழ்ச்சியில் மிதக்கும் கீர்த்தி சுரேஷை கவலைப்பட வைக்கவும் ஒரு சிலர் இருக்கவே செய்கின்றனர் என்றால் அது மிகவும் வேதனை தரும் விடயம் தானே..

வசூல் மன்னர்களான விஜய், விக்ரம் ஆகியோரின் படங்களிலும், விஷால் நடிக்கும் சண்டைக்கோழி-2 படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு, இந்தப் படங்களை விட கைவசம் எந்தப் படங்களும் கிடைக்கவில்லை. அவரை யாரும் தமது புதிய படங்களில் நடிக்க அணுகவில்லை. கவர்ச்சியாகவும், முத்தக்காட்சிகளிலும் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுப்பதால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று, அவரது வளர்ச்சியை பொறுக்காத யாரோ புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.

இதுவரை கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களில் எந்தப் படத்திலும் அதிக கவர்ச்சியோ, முத்தக்காட்சிகளோ இடம்பெற்றிராத நிலையில், புகைந்து கொண்டிருக்கும் இந்த விஷயம் ஒருவேளை உண்மையாய் இருக்குமோ என்று ஆராய, கீர்த்தி சுரேஷிடம் இது பற்றிக் கேட்டபோது......

“நான் படங்களில் நடிக்க தொடங்கியதுமே கமர்சியல் நடிகைகளுக்கு எல்லைகள் இருக்க கூடாது, எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். முத்தக் காட்சிகளில் நடிக்கவும் தயங்க கூடாது என்று கூறினர். ஆனால் என்னிடம் யாராவது முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று அணுகினால் முடியாது என்று மறுத்து விடுவேன்.
இதுவரை நான் நடித்த எந்த படத்திலும் முத்தக் காட்சி இல்லை. அதுமாதிரி காட்சிகள் இல்லாத படவாய்ப்புகளே எனக்கு வந்துள்ளன. நான் நடித்துள்ள படங்களின் டைரக்டர்கள் யாரும் முத்தக் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். என்னால் முத்தக் காட்சிகளில் நடிக்க முடியாது.

காரணம் எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவும் வெட்கப்படுவேன். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தமிழில் நிறைய படங்கள் கைவசம் உள்ளன.” என்கிறார் சின்ன நடிகையர் திலகம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top