Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த ஜப்பானிய காற்பந்து வீரர்கள் - நடந்தது என்ன....???

Sooriyan Gossip - உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த ஜப்பானிய காற்பந்து வீரர்கள் - நடந்தது என்ன....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,809 Views
சுத்தம் சுகம் தரும் என்று எல்லோரும் வாய் கிழிய பேசுவோம். ஆனால், நடைமுறையில் கடைபிடிக்கத்  தவறிவிடுவோம். நாம் வாழும் எம்முடைய தனிப்பட்ட சூழலையே சுத்தமாக வைக்கத் தவறும் நாம், போகுமிடங்களில் எப்படி இருப்போமென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையே. ஆனால் ஜப்பானியர்கள்......?????

2018 உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடர் ரஸ்யாவில் நடைபெற்று வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். இந்தத் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், பெல்ஜியம் அணி வெற்றியடைய, துக்கத்தில் கண்ணீரோடு விடைபெற்றனர் ஜப்பான் வீரர்களும் ரசிகர்களும். போட்டியில் தோல்வியடைந்து துக்கத்தோடு வெளியேறினாலும், சுத்தம் பேணுதல் மூலம் அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பாராட்டையும் காற்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரது உள்ளங்களையும் வெற்றிகொண்டிருக்கின்றார்கள் ஜப்பானியர்கள்.

அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும் மைதான கேலரியை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

ஜப்பானிய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த எடுத்துக்காட்டான செயலே, ஜப்பானிய மக்களின் வாழ்வாதார, சமூக, பொருளாதார, வளர்ச்சியைச் சொல்லப் போதும்.
செயலில் நாமும் கொஞ்சம் முயற்சிப்போமா.........???
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top