Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்

sooriyan gossip - படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
இந்தியாவின் மும்பையை சேர்ந்த கார் சாரதி ஒருவர் தன் மகனுடன் சேர்ந்து தனது பட்டப்படிப்புக் கனவை நிறைவு செய்த சம்பவம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. 
''எம் எப் ஷேக் '' என்ற குறித்த சாரதிக்கு, சிறுவயதில் இருந்து தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையும் கனவு இருந்துள்ளது. அவரது இளமைக்  காலத்தில் அவரது இந்த இலக்கை அவரால் அடைந்து கொள்ள முடியாமற்  போனமை அவருக்கு கவலையை தந்ததே..... 
ஆனாலும் அவர் தனது பட்டப்படிப்பு கனவை எப்படியும் நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாய் மனதில் விதைத்தார். 
 
இந்த நிலையிலே தனது மகனுடன் சேர்ந்து தனது பட்ட கல்வியை தற்போது நிறைவு செய்துள்ளார். முழு நேரமாக  அவரது மகன் தனது கல்வியை தொடர குறித்த தந்தை, பகுதி நேரமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை  தினங்களிலும் தனது கல்வியை பயின்றுள்ளார். 
 
இந்த நிலையில் அவரது மகன் தனது தந்தையின் பட்டப் படிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் - எனது தந்தை என்னுடன் இணைந்து படித்தமை எனக்கு மிகுந்த சந்தோசத்தை தந்தது. அத்துடன் அவருக்கு பாடங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்தமை மிகுந்த உற்சாகமாய் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top