Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
என்னை ஏமாற்றியவர்கள் அதிகம் ; கஸ்தூரி ஓபன் டாக்

Sooriyan Gossip - என்னை ஏமாற்றியவர்கள் அதிகம் ; கஸ்தூரி ஓபன் டாக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,647 Views
நடிகை கஸ்தூரி 1990களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர். அது மட்டுமில்லாமல், தைரியமாக தனது கருத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.



மேலும், ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

சமீபத்தில் திரைக்கு வந்த தமிழ் படம்–2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். சமூக, அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டும் வருகிறார். காஞ்சீபுரம் கோவில் சிலை மோசடி விவகாரம் பற்றி டுவிட்டரில் பேசினார். அதில் ‘‘அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி, திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஒரு ரசிகர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்–2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்’’ என்று கூறியுள்ளார். 

கஸ்தூரி ஏமாந்ததை கேட்டு ரசிகர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top