Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
கொடூர பாலியல் கொலைக் குற்றவாளிக்கு 12 மரண தண்டனைகள்...

Sooriyan Gossip - கொடூர பாலியல் கொலைக் குற்றவாளிக்கு 12 மரண தண்டனைகள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,247 Views
கொடூரமான பாலியல் குற்றவாளி ஒருவருக்கு, பாக்கித்தான் நீதிமன்றம், 12 மரண தண்டனைகளை வழங்கும்படி தீர்ப்பு அளித்துள்ளது.

பாகிஸ்தானில் 9 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அதில் 3 குழந்தைகளை கொன்ற நபருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

''இம்ரான் அலி'' என்ற குறித்த குற்றவாளி பாகிஸ்தானின் கசூர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்து, சிறுமியை கொலையும் செய்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை லாஹூரின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனைகள், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 லட்சம் ரூபாய் அபராதம் எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த வழக்கு விசாரணைக்காக இம்ரான் அலியிடம் விசாரணை நடத்திய காவற்துறையினர் பல திடுக்கிடும் தகவல்களை
வெளியிட்டனர்.

இம்ரான் அலி, இதேபோன்று மேலும் 8 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் 3 குழந்தைகளை கொலை செய்ததும் தெரியவந்தது.

3 சிறுமிகளை கொலை செய்தமை காரணமாக வழக்கில், ஒவ்வொரு கொலைக்கும் 4 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top