Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
ஒளி இழந்தது "உதய சூரியன்" திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.. பெரும் சோகத்தில் தமிழகம்!

Karunanithi - ஒளி இழந்தது "உதய சூரியன்" திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.. பெரும் சோகத்தில் தமிழகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,871 Views
தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
 
சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.  இந்நிலையில் 27.07.2018  அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.



அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.  இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். 
 
மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர். 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top