Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
இந்த ஒருவார காலத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் ???

Sooriyan Gossip - இந்த ஒருவார காலத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் ???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,981 Views
 கடந்த ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ‘கலைஞர்’ என்ற பெயர் கூகுளில் அதிகளவில் தேடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, உடலநலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் காலமானார். கலைஞர் கருணாநிதி தன்னுடைய செய்திகள், பிரதானமாக பத்திரிகைகளில் வர வேண்டும் என்பதில் அதிகளவில் சிரத்தை எடுத்துக்கொள்வார். இதற்காக பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு மிக கவனத்துடன், அதேசமயம் மிக சாதுர்யமாக பதில் அளிப்பார். அவர் காலமான செய்தி உலகம்  முழுவதும் பத்திரிகைகளில் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் மறைவு செய்தியை அனைத்து ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களிலும் அவரைப்பற்றிய செய்திகள் பெரிய அளவில் வலம் வருகின்றன.மேலும், இணையதளத்திலும் அவரது பெயர் அதிகளவில் தேடப்பட்டது, தற்போது தெரியவந்துள்ளது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் சேர்க்கப்பட்டது முதல் இணையதளத்தில் இந்திய அளவில் அதிகளவில் அவரது பெயர் தேடப்பட்டுள்ளது. அதாவது 5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ என்ற வார்த்தையையும், 2 லட்சம் முறைக்கு மேல் ‘கலைஞர்’ என்ற வார்த்தையையும் பதிவிட்டு, செய்திகளை மக்கள் பெற்றுள்ளனர்.இதுதவிர மாநிலங்கள் வரிசையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகியவற்றில் கருணாநிதி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அதிக முறை தேடப்பட்டுள்ளன. கூகுள் தேடல் பொறி மூலம், கடந்த 7 நாளில் 24 மாநிலங்கள் அதிகம் கருணாநிதி குறித்த தகவல்களை தேடியுள்ளனர்.இந்திய அளவில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலும் கருணாநிதி, கலைஞர் என்ற பெயர் அதிகளவில் தேடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top