Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
காப்பகத்தில் இருந்து 26 பெண்கள் மாயம் - அதிர்ச்சியில் காவல்துறை!

Sooriyan Gossip - காப்பகத்தில் இருந்து 26 பெண்கள் மாயம் - அதிர்ச்சியில் காவல்துறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,553 Views
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 26 பெண்கள் மாயமாகி உள்ளதாக, புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டியோரியா பகுதியில் இயங்கி வந்த சிறுமிகள் காப்பகத்தில், குறித்த சிறுமிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குறித்த காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி ஒருவர் காவற்துறையிடம் இவ்வாறான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காப்பகத்தின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து, அந்த மாவட்டத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அனைத்து காப்பகத்திலும் சோதனை நடத்துமாறும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அந்தவகையில், அசல்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் சோதனை மேற்கொண்டதில், காப்பக குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்ட 15 பெண்களில் 12 பேர் காணவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக காப்பக நிர்வாகியிடம் விசாரணை நடத்தியதில் அனைத்து பெண்களும் பணிக்கு சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முறையான பதிவு ஏதும் காப்பக நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை என்று காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், அஸ்ட்புஜா நகர் பகுதியில் இயங்கிவந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பெண்கள் மாயமானது கண்டறியப்பட்டது. இந்த காப்பக நிர்வாகத்தினரும் முறையான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த இரண்டு காப்பகங்களில் இருந்தும் மொத்தமாக 26 பெண்கள் மாயமாகியமை கண்டறியப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top