அமெரிக்காவில் உள்ள ஒரு நகை கடையில் எறும்பு ஒன்று வைரக்கல்லை எடுத்து செல்வதுபோன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைர மொத்த விற்பனையாளர் ஒருவரின் கடையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மேஜை மீது எதோ நகர்வதை உணர்ந்த கடை உரிமையாளர் இந்த வீடியோவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ வெளியானது முதலே உலகின் மிக சிறிய வைர திருடன் என சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த எறும்பின் ஒவ்வொரு அசைவையும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப விமர்சனம் செய்து வருகின்றனர்.
எறும்புகளுக்கு தங்களுடைய எடையை விட 10 மடங்கு அதிக எடையை சுமக்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.