Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...

Cinema - ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

847 Views
பாஹுபலி திரைப்படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி எல்லோரது வரவேற்பையும் பெற்றதன் பின்னும், தமிழில் வந்த படங்கள் அவ்வளவு கை கொடுக்காத நிலையில், தெலுங்குப் படங்களின் மூலம் திரையுலகில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வரவிருக்கும் "சைரா நரசிம்மரெட்டி" படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி போடும் தமன்னா, வேறு பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றார். திரையுலகைப் பொறுத்தவரையில், கதாநாயகி வாய்ப்பு குறைந்த நடிகைகளே ஒரு பாடலுக்கு நடனமாட உடன்படுவார்கள். நிலை இப்படியிருக்கையில், தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாட ஒத்துக்கொள்வது அவருக்கு நெருக்கமானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், நேரடியாக தமன்னாவிடம் இதுபற்றி கேட்டபோது "நான் சினிமா உலகுக்கு வந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடாதீர்கள் என்று பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நடனம் என்பது எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த அளவுக்கு நான் உயர்வதற்கு நடனத்தோடு சேர்ந்த நடிப்பும் காரணம். பெரிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பது இல்லை. குறைவான காட்சிகளே அவர்களுக்கு கொடுப்பார்கள். அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது கஷ்டம். அந்த நடிப்பை மட்டும் வைத்து ரசிகர்களை நமது பக்கம் இழுக்க முடியாது.

எனவேதான் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நடனம் மூலமாக ரசிகர்களை எனது பக்கம் இழுத்தேன். ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாலும் மறுப்பது இல்லை. எனது உடல் எடை கூடாதது குறித்தும் பேசுகிறார்கள். நான் பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ஆனாலும் அளவோடு சாப்பிடுகிறேன்.’’ என வார்த்தைகளால் உண்மையை போட்டு உடைக்கிறார் இந்த தெலுங்கு தேசத்துத் தேவதை.






Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top