Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்

Sooriyan Gossip - வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,270 Views
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 26 பேரை மீட்க வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்டின் துணிகரமான செயலை அனைவரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
கேரள வெள்ள பாதிப்பு குறித்த காணொளிகளோடு, இப்படி துணிகர மற்றும் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பிலான காணொளிகள் சமூக வலை பதிவுகளில் தற்போது காணக்கூடியதாக உள்ளது.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய முப்படையினரும் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதில் விமானப்படைக்கு சொந்தமான 42பி ஹெலிகப்டர் ஆபத்தான நிலையில் சிக்கித்தவித்த 26 பேரை மீட்க, அங்குள்ள வீடொன்றின் மாடியில் இறங்கி, அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்ட்டுள்ளது.
இந்த ஹெலிகப்டரை பைலட் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

இதில் ராஜ்னீஷ் துணை பைலட்டாகவும், சத்தியார்த் வழிகாட்டும் நபராகவும், அஜித் என்பவர் விஞ்ச் ஆபரேட்டராகவும், அவர்களோடு தண்ணீரில் இறங்கி மீட்பவராக ராஜன் என்பவரும் சாலக்குடி நகரில் மீட்பு பணியில் இவர்கள் ஈடுபட்டனர்.

காலையில் இருந்து சாலக்குடி நகரில் உணவு மற்றும் மீட்பு உபகரணங்களை இறக்கி விட்டு, பொதுமக்களை மீட்கும் பணியை தொடங்கினர்.
அந்த நேரத்தில் இரண்டு அடுக்கு மாடியில் இருந்து சிலர் கையசைத்து ஹெலிகப்டரை அழைத்தனர். இதையடுத்து அதிரடியாக பைலட் ராஜ்குமார் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை தரையிறக்கி 26 பேரையும் காப்பாற்றி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பைலட் ராஜ்குமார் தெரிவிக்கையில்,
உதவி கேட்ட அத்தனை பேரும் வயதானவர்கள். அதில் ஒருவர் வீல்சேரில் வேறு அமர்ந்திருந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. துணிச்சலுடன் வீட்டு மாடியில் ஹெலிகப்ரரை இறக்கி விட்டேன். 8 நிமிடம் அங்கு நிறுத்தி 26 பேரையும் மீட்டோம். இன்னும் 3 விநாடிகள் மட்டும் அங்கு நின்றிருந்தால் ஹெலிகப்டர் வெடித்து சிதறியிருக்கலாம். ஆனால் நான் ஹெலிகப்ரரின் முழு எடையையும் வீட்டின் மேல் நிறுத்தவில்லை. பாதி பறந்த நிலையில்தான் ஹெலிகப்டர் இருந்தது. இருந்தாலும் இது ஆபத்தான முயற்சி. கூடுதலாக மூன்று அல்லது 4 விநாடிகள் இதுபோன்று ஹெலிகப்டர் நின்று இருந்தால் வெடித்து சிதறியிருக்கும். ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் அத்தனை பேரையும் காப்பாற்ற நான் எடுத்த சரியான முடிவு என்று தான் நினைக்கிறேன். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி இவ்வாறு உணர்சி பூர்வமாக ராஜ்குமார் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top