தனது கால்களை 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து, உலக சாதனையை அமெரிக்கர் ஒருவர் படைத்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த மோசஸ் லான்ஹம் என்பவர் தனது இரண்டு கால்களையும் வழக்கத்திற்கு மாறாக திருப்பி, பின்புறமாக இருக்கும் படி நடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவர் தான் சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் போதே, திடீரென தனது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை பின்புறமாக திருப்பி நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இவரது இந்த வித்தியாச முயற்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.