Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
4 வயது பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துன்பம் - தொடரும் துயரம்

Sooriyan Gossip - 4 வயது பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துன்பம் - தொடரும் துயரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,335 Views
4  வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு சுமார் 7 மணிநேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  
 
இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசில் உள்ள காதியா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

கடந்த 15ம் திகதி வீதி ஒன்றில் வேறு சில சிறுவர்களுடன் 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே 14  வயது சிறுவன் ஒருவன்  குழந்தையை  பலாத்காரம் செய்துள்ளான். 
 
இந்த சம்பவம் தெரிந்து அதிர்ச்ச்சி அடைந்த  குழந்தையின் பெற்றோர், காதியா காவல்நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளனர். 
 
குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட காவற்துறையினர், விசாரணைகளை துரித கதியில் முன்னெடுத்தனர். இந்த விசாரணைக்கு சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 
 
இதனிடையே குழந்தையை பலாத்காரம் செய்த சிறுவன் தலைமறைவாகியுள்ள நிலையில், ராஜஸ்தானில் உள்ள அவனுடைய உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டான். 
 
இந்த நிலையில், வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிறுவர் நீதிமன்றத்தின் முன்பு நேற்று முன்தினம் (20 .08 .2018 )காலை 10.30 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டன.   
 
வழக்கை விசாரித்த நீதிபதி திரிபாதி பாண்டே,7 மணிநேரத்தில் தன்னுடைய தீர்ப்பை வெளியிட்டார். 
 
இந்த நிலையில், இதுகுறித்து அரசுதரப்பு வழக்கறிஞர் தீபேந்திர மாலு கூறுகையில்,
 
 ''இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், கடந்த 2012 முதல் அமுலில் உள்ள நிலையில், குழந்தை மீது நடத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஐந்தே நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. இந்த மனநிலையை மாற்ற, இந்த சிறுவனை இரண்டு ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறினார். 
 
இதையடுத்து, குறித்த  சிறுவன்  சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top