பிக்பொஸ் புகழ் ரைசா பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படத்துக்கு பிறகு பாலா தெலுங்கு படமொன்றை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.
அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் உருவாகிறது. இதில் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக மேகா நடிக்கிறார். இவர்களுடன் காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரிராவும் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். வர்மா படத்தில்தான் ரைசா முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.