Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
''கொம்பு'' திரைப்படம் திகிலா? நகைச்சுவையா?

Cinema - ''கொம்பு'' திரைப்படம் திகிலா? நகைச்சுவையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

444 Views
நகைச்சுவை நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் ''கொம்பு'' என்ற படத்தில் ஜோடி சேருகிறார் நடிகை திஷா பாண்டே.

இந்த படத்தில் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஸ்மிதா போன்றோரும் நடிக்கிறார்கள்.

தேவ்குருவின் இசையில் வெளிவரும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சுதீப் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் ஈ. இப்ராகிம் செய்துள்ளார்.

இந்த திரைப்படம் திகில் மற்றும் நகைச்சுவை சேர்ந்த படம் என்று இயக்குநர் இப்ராகிம் கூறுகிறார்.
இந்த நிலையில் இப்ராகிடமிருந்து இந்த திரைப்படம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
திகில் பேய்ப் படங்கள் வித்தியாசப்படுவது கதை சொல்லப்படும் விதத்திலும், அந்தக் கதையின் பயத்தை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் நடிகர்களின் நடிப்பு திறனிலும் தங்கியுள்ளது.

இந்த நிலையில் ''கொம்பு'' திரைப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்று அவர் கூறுகிறார்.

ஏற்கனவே திகில் படங்களில் ரசிகர்களை பயப்படுத்தி, சிரிக்கவும் வைத்த நடிகர் பட்டாளமே இந்தப் படத்திலும் இருப்பதை படத்தின் ஹைலைட்டாக கருதுகிறேன் என்றும் அவர் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்தக் கதை வெறும் திகில், பேய்க் கதை என்றில்லாது,பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஜீவா கதாபாத்திரம் தொடர்பில் கூறும்போது, வழமையான ஜீவாவை இதில் பார்க்க முடியாது. முற்றிலும் வித்தியாசமாக பார்க்கலாம்.

அத்துடன் திஷா பாண்டேவிற்கு இந்தப் படம் முக்கிய திருப்புமுனையாக இருக்கும். திஷா பாண்டே ஒரு திறமையான நடிகை. அவருக்கு இந்த படம் ஒரு சரியான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. கதைக்குத் தேவையான நடிப்பு, திரைக்குத் தேவையான அளவு கவர்ச்சி என தனக்கான முத்திரையை மீண்டும் பதித்துள்ளார் என்று கூறிய இயக்குனர், படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top