Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
300 பவுண் நகை களவாடப்பட்டமை தொடர்பில் நடிகர் செந்தில்.....

Sooriyan Gossip - 300 பவுண் நகை களவாடப்பட்டமை தொடர்பில் நடிகர் செந்தில்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,035 Views
300 பவுன் நகை களவாடப்பட்டமை தொடர்பில்  நடிகர் செந்திலின் நெருங்கிய உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகர் செந்திலின் உறவினரான பூபதி ராஜா சென்னையில் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். பூபதிராஜாவின் மனைவி சண்முகவடிவு தனது தங்கை உமாவிடம் 300 பவுன் நகைகளை கொடுத்து அதனை ராமநாதபுரதில் வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் பூபதி ராஜாவின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், சண்முகவடிவு உமாவிடம் நகைகளை எடுத்துக் கொடுக்கும்படி கூறியிருந்தார்.

அதன்படி உமா நகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அவரிடம் இருந்து மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றதாக உமா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அப்படி ஒரு சம்பவமே நடக்காததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து காவல்துறை உமாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், உமா நகைகளை திருடி மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார்.

உடன் பிறந்த அக்காவின் நகைகளை தங்கையே திருடிய சம்பவம், தற்போது வெளிவந்தமையினை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top