கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2ம் பாகத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1996ம் ஆண்டு உலகநாயகன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதில் முதியவர் தோற்றத்திலும் இளம் ஹீரோ கதாபாத்திரத்திலும் கமல் நடித்திருந்தார். இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பின்னர் 2ம் பாகம் உருவாகவிருப்பதால் தற்போதைய அரசியல் சாடல்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மீண்டும் கமல் ''இந்தியன் தாத்தா வேடம்'' ஏற்பது சிறப்பாகும். எப்படி இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியன் 2ம் பாகத்திலிருந்து கமல் விலகவுள்ளதாக தகவல் கசிந்திருந்தது.
அந்த கருத்தை மறுக்கும் விதமாக சமீபத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் கமல் நடிப்பதை உறுதி செய்து வழங்கிய பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது.
இதையடுத்தே இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
இயக்குனர் ஷங்கர் இப்போது பரபப்பாக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் முக்கிய படப்பிடிப்பு மேற்கொள்ளும் இடங்களை தேடி வருகிறார்.