Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
மந்திரவாதியின் கொலைக்கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பு ?

Sooriyan Gossip - மந்திரவாதியின் கொலைக்கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பு ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

593 Views
ந்திரவாதி சையது பசீருதீனை, பெண்  ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சன்ர்ஸ் பகுதியை சேர்ந்தவர் 63 வயதுடைய சையது பசீருதீன். 
 
 

இவர் சுமார் 10 ஆண்டுகளாக, தொழில் வளர்ச்சி, குடும்ப பிரச்னை, தீராத நோய் என பல்வேறு பிரச்சினைகளுக்கு  மந்திரம் ஓதி அவற்றை  தீர்த்து வருகிறார்.  
 
இவரது இந்த மந்திரம் ஓதும் நிலையம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் பெரிய மசூதிக்கு எதிரே அமையப்பெற்றுள்ளது. 
 
கடந்த திங்கள் கிழமை இரவு சையது பசீருதீன் நிலையத்திற்கு    10க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து, தமது குடும்ப பிரச்னைக்கு மந்திரம் செய்து அவர் வழங்கும் தாயத்தை பெற்று கொண்டிருந்தனர். 
 
அந்த நேரத்தில், கருப்பு நிற பர்தா அணிந்து கொண்டு வந்த பெண் ஒருவர், சையது பசீருதீன் மீது ரசாயனம் போன்ற திரவத்தை வீசிவிட்டு வேகமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 
 
குறித்த ரசாயன திரவம் அருகில்  எரிந்து கொண்டிருந்த  விளக்கில் பட்டதும், உடனே அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. 
 
இந்த சமயத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர், அங்கிருந்த 10 பெண்களிடமும்  விசாரணை நடத்தினர். 
 
காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணையின் போது  ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் அவரது   வீட்டை பூட்டிவிட்டு மாயமானது தெரியவந்தது. 
 
இந்த நிலையில் மாயமான பெண்ணை பிடிக்க 3 சிறப்பு குழுவினர் அமைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
 
அவர்மீது வீசப்பட்டது, மண்ணெண்ணெய்யோ பெட்ரோலோ இல்லை என்றும், வேறு ஒரு  ரசாயனம்  பொருள் பயன்படுத்த பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே தனது குடும்பத்துடன் தலைமறைவான பெண்னை கண்டறிந்தால்தான் மந்திரவாதி சையது பசீருதீனை கொலை செய்தது தொடர்பான சரியான தகவல் தெரியவரும் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top