பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான்,பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இம்ரான்கான் பிரதமராக தெரிவானபின் தான் எளிமையான வாழ்க்கையை பின்பற்ற போவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால், அவர் தனது தற்போதைய வாழ்க்கை முறையில் எளிமையை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
அவர் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சுமார் 15KM தொலைவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகின்றார். இந்த நடவடிக்கையால் அவர் பெரும் விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இம்ரான்கான், பிரதமராக பதவியேற்ற போது அவருக்கு வழங்கப்பட்ட அதி சொகுசு அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை வேண்டாம் என்று கூறி அதை ஏற்கவும் மறுத்தார்.
மேலும் இரண்டு பணியாட்கள் மாத்திரம் போதும் என்றும் இரண்டு புல்லட் புரூப் கார்கள் இருந்தால் போதும் என்று தெரிவித்திருந்தார்.
அது மாத்திரமின்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் போன்றோர் விமான பயணத்தின் போது, கூடுதல் கட்டணத்தில் பயணிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
இம்ரான்கானின் எளிமையை உலக நாடுகளே வியந்து பேசின.
இந்தவேளையில் தற்போது இவரது நாளாந்த ஹெலிகாப்டர் பயணம் பற்றியும் அதன் செலவு தொடர்பிலும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாக்கிஸ்தான் தகவல் துறை அமைச்சர் பாவாத் சவுத்ரி. இது குறித்து கூறுகையில், ''இம்ரான் கான் செயல்பாடு சரியானதுதான். ஹெலிகாப்டரில் 1km தூரம் பயணம் செய்ய, ரூ.50 முதல் ரூ.55 வரை தான் செலவாகும்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால், உண்மையான செலவு மிக அதிகம் என்று கூறப்படுகிறது. வீடு மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு இடையேயான தூரம் 15 km. விமான போக்குவரத்தை பொறுத்தவரை இதை 8 நாட்டிகல் மைல் என்று கூறுவர்.
(நாட்டிகல் என்பது கடல் நீரின் நீளத்தை அளக்கப்பயன்படும் ஒரு அலகு ஆகும் . இதனை கடல் மைல் எனவும் நாட்டிகல் மைல் எனவும் கூறலாம் . ஒரு நாட்டிகல் மைல் என்பது 6076 அடிகள் ஆகும் . அதுவே சாலையில் 5280 அடிகள் எனவே சாலையை விட கடலின் தொலைவு அதிகமாகும் )
ஹெலிகாப்டரில் ஒரு நாட்டிகல் மைல் தூரம் செல்ல செலவாகும் பணம் ரூ.16 ஆயிரம் ஆகும். 8 நாட்டிகல் மைல் தூரம் செல்ல செலவாகும் மொத்த பணம் ரூ.1.28 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் இம்ரான்கானின் ஒரு நாளுக்கான பயணச்செலவு அதிகமே. அதே நேரம் அவர் காரில் அலுவலகத்திற்கு சென்றால் குறைந்தளவே செலவாகும்.
என்னமோ இம்ரான்கான் தற்போது இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறாரோ தெரியவில்லை.