Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
பெண்களே உங்களுக்காக!!!! சமையலறைசுத்தம்... ஆரோக்கியம் நித்தம்..

sooriyan gossip - பெண்களே உங்களுக்காக!!!! சமையலறைசுத்தம்... ஆரோக்கியம் நித்தம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,270 Views
எமது சமையலறையை நாம் எவ்வளவு சுத்தமாக பயன்படுத்துகின்றோமோ அவ்வாவு தூரம் நானும் ஆரோக்கியமாக இருக்கலாம்.மருத்துவமனையை நாடவேண்டிய அவசியமில்லை.நீங்கள் அடிக்கடி நோய்க்கு ஆளாகுகின்றீர்கள் என்றால் அதற்கு முதல் காரணம் உங்கள் சமையலறை சுத்தமின்மைதான் காரணம்.
நாம் பயன்படுத்தும் சமையல் அறையையும், சமையல் அறை பொருட்களையும் எவ்வாறு சுத்தமாக வைக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

காய்கறிகளையோ பழங்களையோ வெட்டும் போது முதலில் அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.அதுமட்டுமல்லாமல் நீங்கள் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தி அரிவாள்மனையும் கழுவி இருத்தல் அவசியம்.காய்கறிகளோ பழங்களோ நறுக்கிய பின்பும் கத்தி அரிவாள்மனையை நன்கு கழுவ வேண்டும்.

சமைக்கப்பயன்படுத்தும் அடுப்பை ஒவ்வொருநாளும் துடைத்து பயன்படுத்த வேண்டும். அடுப்பு மட்டுமல்லாது சுற்றியுள்ள பகுதி அனைத்துமே நன்கு துணியில் தண்ணீர் விட்டு கழுவி துடைக்க வேண்டும்.

கரப்பான்பூச்சி எலி எறும்புகள் வரும் அளவிற்கு உங்கள் சமையலறையை பாதுகாப்பின்றி சத்தமின்றி வைத்துக்கொள்ளாதீர்கள்.

பாத்திரங்களை கழுவும் போது சுத்தம் செய்யும் சவர்க்காரம் பாத்திரத்தில் படிந்திருக்கிறதா என நன்கு அவதானியுங்கள்.காரணம்,அப்பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் போது அவை உணவோடு கலந்து விடும்.பின் அதனை நாம் உட்கொள்ளும் போது வயிற்றில் நோய்கள் உருவாகிவிடும்.


சமையல் முடிந்த பின்போ அல்லது சமையல் வேலையின்போதோ பாத்திரங்கள் கழுவும் சந்தர்ப்பத்தில் ‘சிங்க்’கில் தண்ணீர் தேங்கிநிற்கும்.எப்போதும் அப்பிடி தேங்க விடக்கூடாது.உடனே தண்ணீரை வெளியேற்றிட வேண்டும்.அதுமட்டுமல்லாது சிங்கை நன்றாக கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


காய்கறிகள் பழங்கள் அழுகிபோயிருந்தால் உடனடியாக வீசிடுங்கள்.நல்ல பகுதியை வெட்டி எடுத்து பாவிப்பதை நிறுத்துங்கள்.நோய்களை நீங்களே வலுகட்டாயமாக பெற்றுக்கொள்ளாதீர்கள்.

மாவு அல்லது ரவை போன்றவற்றில் வண்டு, கிருமிகள் இருந்தால் எந்தகாரணத்தைக்கொண்டும் மீண்டும் வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம் என்று நீங்களாக முடிவெடுக்காதீர்கள்.கிருமிகளின் முட்டைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் மாவு அல்லது ரவையுடன் கலந்திருக்கும்.அவற்றை மீண்டும் பயன்படுத்துவதால் உடலினுள் பலவிதமான நோய்கள் ஏற்படும்.

முடிந்தவரை உங்கள் சமையலறை சூரிய வெளிச்சம் படும் வகையில் அமைந்து இருப்பது நல்லது.

மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டால் பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top