Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
டயானாவும் - நெஞ்சை உருக்கும் அந்த நொடியும்

sooriyan gossip - டயானாவும் - நெஞ்சை உருக்கும் அந்த நொடியும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,517 Views
உலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானா.
 
ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்த இவர், வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவியாவர் . இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி. இளவரசர் சார்ஸ்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் அனைத்தையுமே ஊடகங்கள் உடனுக்குடன் வெளியிட்டு வந்தன.
 
உலக பிரபலம் ஆன சிறிது காலத்தில் இந்த உலக வாழ்விற்கு விடைகொடுத்த இளவரசி டயானாவின் நினைவு நாள் இன்று.
 
உலகில் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் பிரபலங்கள் பலர். காந்தியின் கொலை வழக்கில் இருந்து ப்ரூஸ்லீ, டயானா என இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே  செல்கிறது. 
 
பரிஸ் நகரில் நடந்த பயங்கரமான கார் விபத்தில் டயானா பலியாகினர். இவர் இறந்து சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகிறது. 
 
டயானா கார் விபத்தில் சிக்கியிருந்த போது அவருக்கு முதன் முதலில் முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர், பல வருடங்களாக அந்த விபத்து குறித்து யாரிடமும் எந்த தகவலும் கூறாமல் மௌனம் காத்துவந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்ததை பின் நாட்களில் அறிய கிடைத்தது. 
 
ஆனால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் கூறிய தகவல்கள்  டயானா மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. 
 
டயானா அந்த அபாயகரமான கார் விபத்தில் சிக்கியபோது சேவியர் கோர்மெலோன் என்ற தீயணைப்பு வீரர் அவருக்கு முதலுதவி அளித்திருந்தார். இவர் பரிஸ் நகரில் 22 ஆண்டுகளாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்தார். 
 
ஆகஸ்ட் 30, 1997 அன்று  நள்ளிரவு பரிஸ்ன் ரிட்ஸ் ஹோட்டலில் தொடங்கியது அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம். 
 
டயானாவை அந்த உயர் தர ஹோட்டலில் இருந்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் விரட்டிவர, அவரது மெர்சிடிஸ் எஸ்280 கார், 100km வேகத்திற்கு மேல் சீறிப் பாய்ந்தது. 
 
வேகமாக சீறிப்பாய்ந்த கார் ஒரு சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
 
பின் தொடர்ந்து  விரட்டி வந்த புகைப்படக் காரர்கள், சிறிது தூர இடைவெளியிலேயே வந்தனர். 
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே, அவர்கள் இளவரசி டயானாவின் காரை அண்மித்தனர். 
 
இந்த புகைப்பட காரர்களில் ஒருவர், திடீரென நேர்ந்த கோரா விபத்தை புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
அந்த பிலிம் ரோல்களை காவற்துறையினர் பின்னர்  தங்கள் கைவசம் வைத்துக் கொண்டதாகவும் சில தகவல்கள் மூலம் தெரிய வந்தது. 
 
அந்த அபாயகரமான விபத்து சம்பவித்து சுமார் பத்து நிமிடங்களில், சம்பவ இடத்திற்கு காவற்துறையினரும் , தீயணைப்பு படை வீரர்களும் பிரசன்னமாகினர். 
 
அப்போது சேவியர் கோர்மெலோன் என்ற தீயணைப்பு வீரர்தான் டயானாவை காரில் இருந்து வெளியே பத்திரமாக எடுத்துள்ளார். சேவியர் கோர்மெலோன் டயானாவை வெளியே இழுக்கும் போது , அவர் "ஓ மை காட், என்ன நடந்தது.." என்று கூறியதாக அறியப்படுகிறது.
 
இந்த விபத்து நேர்ந்தது இளவரசி டயானாவிற்கு என்று தெரியாமலே அவரை காரில் இருந்து   சேவியர் கோர்மெலோன் மீட்டுள்ளார். 
 
வெளியே கொண்டு வந்து முதலுதவி கொடுத்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகே, அவர் டயானா என்பதை உடன் பணிபுரிவோர் மூலம் அறிந்துள்ளார் சேவியர் கோர்மெலோன்.
 
சேவியர் கோர்மெலோன் கண்ட போது டயானாவுக்கு பெரிதாக எந்த அடியும் இல்லை, அவரது வலது தோள்பட்டையில் மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தன. மற்றபடி அவரது உடலில் எங்கேயும் துளி இரத்தமும் இல்லை என்று கூறியிருந்தார். 
 
(ஆனால், மருத்துவமனைக்கு சென்ற பிறகு, டயானாவுக்கு உட்காயங்கள் அபாயகரமாக ஏற்பட்டிருந்தது என்று கூறப்பட்டது.)
 
அத்துடன், திடீரென டயானாவுக்கு சுவாசிப்பது கடினமாகி, அவர் சுவாசிப்பதை நிறுத்திவிட்டார் என்றும், உடனே தானே டயானாவுக்கு சி.பி.ஆர் முறையில் நெஞ்சை அழுத்தி மசாஜ் செய்து மீண்டும் சுவாசிக்க செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மீண்டும் சுவாசிக்க துவங்கிய டயானா இயல்பு நிலைக்கு திரும்பியவுடன்தான் தனக்கு நிம்மதியாக இருந்தது என்று சேவியர் கோர்மெலோன் கூறியிருக்கிறார். 
 
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் போது டயானா சீரான நிலையில் தான் இருந்தார் என்றும், அவர் இறந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியானபோது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் சேவியர் கோர்மெலோன் கூறியிருந்தார்.
 
இதனிடையே, பிரான்ஸில் தீயணைப்பு படையில் இருப்பவர்கள் இராணுவத்தின் ஒரு அங்கத்தினராக இருப்பார்கள். 
ஆகையால், அவர்கள் ஊடகங்களிடம் பேச அனுமதி இல்லை. 
 
எனவேதான், கிட்டத்தட்ட இருபது வருடம் அவரது மரணம் குறித்து யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார் சேவியர் கோர்மெலோன். 
 
கடந்த வருடம் அவர் தனது பணிக்காலம் முடிந்து ஓய்வுப் பெற்ற பின்னரே இதுகுறித்து பேசுவதில் தவறில்லை என்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். 
 
சேவியர் கோர்மெலோன் கூறியதில், டயானா கார் விபத்துக்கு பின்னர் வலது தோள்பட்டையில் மட்டுமே சிறிய காயங்களுடன் இருந்துள்ளார். ஆனாலும் மூச்சு திணறல் ஏற்பட்டு சி.பி.ஆர் முறையில் அதையும் சீராக்கிவிட்டோம் என்றும் கூறியிருந்தார்.
 
ஆனால், மருத்துவ அறிக்கையில், டயானாவுக்கு பயங்கரமான உட்காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரது இதயம் வலது புறமாக நகர்ந்திருந்தது. இதனால் நுரையீரல் நரம்பு (Pulmonary Vein) வலுவாக பாதிக்கப்பட்டிருந்தது. 
 
இதனால் நீண்டநேரம் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காது அவர் ஆகஸ்ட் 31, 1997 அதிகாலை நான்கு மணியளவில் மரணம் அடைந்தார். 
 
டயானா உயிரிழந்த வேதனை தரும் செய்தியை ஊடங்கள் ஆறு மணியளவில் வெளியிட்டன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top