Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
பாம்பாகிய வரலக்ஷ்மி - நீயா-02

Sooriyan Gossip - பாம்பாகிய வரலக்ஷ்மி - நீயா-02Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,137 Views
நீயா எனும் பாம்புக்கதை வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்த திரைப்படத்தை மீண்டும் பார்க்கக் கிடைத்தால் எப்படியிருக்கும்?

அந்த சந்தர்ப்பம் இதோ மீண்டும் வந்து கிடைத்திருக்கிறது. 
தனது காதலன் பாம்பை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு அழகான பெண்ணாக மனித வடிவத்துக்கு மாறி எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் அன்றுகளில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்தும் இருந்தார்.

காதலனை கொன்ற கமல்ஹாசன் நண்பர்களை ஒவ்வொருவராக பாம்பு கொல்வதும் பிறகு கமல்ஹாசனையும் கொல்ல துடிப்பதும் அவர் தப்பினாரா? என்பதும் கதை. நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா போன்ற இனிமையான பாடல்கள் அந்தப் படத்தில் இருந்தன.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா-2’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜெய், ராய்லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடிக்கின்றனர். எல்.சுரேஷ் இயக்கும் இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “இந்த படமும் நீயா படம் போன்று பழிவாங்கும் பாம்பு கதைதான். ஆனால் கதை களம் முழுக்க வேறுவடிவத்தில் இருக்கும். வரலட்சுமிக்கு நடனம் தெரியும் என்பதால் அவரை பாம்பாக நடிக்க வைத்து இருக்கிறோம்” என்றார்.

பாம்பு தோற்றத்தை கிராபிக்ஸில் முதல் பாகத்தை விட மிரட்டலாக படமாக்குகின்றனர். இந்த படத்தில் ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோரின் முதல் தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பேய் கதைகள் பெற்ற வெற்றியை இந்த பாம்புக்கு கதை பெறுமா என்பதையும், முதல் நீயா கொடுத்த ஹிட்டை இந்த நீயா பாகம் இரண்டு கொடுக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top