Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
உறவுகளை வலுப்படுத்த அதிகம் உரையாடுங்கள்

sooriyan gossip - உறவுகளை வலுப்படுத்த அதிகம் உரையாடுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

592 Views
இப்போதெல்லாம் அதிக விவகாரத்துக்களும்,குடும்ப உறவுகளுக்கிடையில் இடைவெளியும் சண்டைகளும் ஏற்படக்காரணம் சில நேரங்களில் சில இடங்களில் மனம் விட்டு பேசாமலிருப்பதுதான் முக்கிய காரணமாக அமைகின்றது.
உலகளாவிய மனநல மருத்துவர்கள் வலுப்படுத்தி உறுதிப்படுத்தி சொல்லும் ஒரு விடயம் என்னவென்றால் "உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்"என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.

பலருக்கு மனஅழுத்தம் ஏற்பட முக்கிய காரணமே தங்களுக்கு பிடித்தவர்களிடம் மனஅழுத்தம் ஏற்பட காரணமானவர்களிடம் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.

உரையாடலானது கடிதம் தொடக்கம் சகல வலைத்தளங்கள் வாயிலாகவும் உரையாட தொடங்கிவிட்டோம்.எவ்வளவு தூரம் நாம் மனம் விட்டு பேசத்தொடங்குகின்றோமோ அந்தளவுக்கு நாம் நிம்மதியாக நமது வேலையை செய்ய முடியும்.

இந்த உரையாடல்கள் தான் பல பிரிவிற்கும் பல சேர்தலுக்கும் காரணமாக அமைகின்றது.

சிலரைப்பார்த்தோமானால் பேசுவதால்தான் பிரச்சினை என்று மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் மனம் விட்டு பேசாமலிருப்பர்.

சிலர் பேசாமலிருப்பதுதான் பிரச்சினை என்று நினைத்து பேசும் முறை தெரியாமல் உரையாடத்தொடங்குவர்.

ஒரு விடயத்தை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.நாம் ஒருவருடன் பேசத்தொடங்கும் முன் அந்த உறவு நமக்கு எவ்வளவு முக்கியமானது என்று யோசியுங்கள்.அதை நினைவில் வைத்துக்கொண்டு மனம் விட்டு பேசுங்கள்.பேசும் போது பேசும் வார்த்தைகளில் கவனமெடுத்துக்கொள்ளுங்கள்.

மனதிற்கு சுமை தந்திடும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.கோபம் ஏற்பட்டாலும் அன்பாக சொல்லி புரிய வையுங்கள்.உண்மையான அன்புக்கு அடிமையாகாதவர்கள் உலகில் யாருமில்லை.அன்பை முடிந்த வரை வெளிப்படுத்துங்கள்.நாம் அன்பை வெளிப்படுத்துவதால் அன்பு இன்னும் நம்மில் அதிகரிக்குமே தவிர குறைந்து போகப்போவதில்லை.

மனம் விட்டு பேசுவதற்கு சிறிது நேரமாவது ஒதுக்கிக்கொள்ளுங்கள்.வேலை நமக்கு முக்கியம்தான்.இருப்பினும் மனதில் சுமைகள் அதிகமாக இருக்குமானால் செய்யும் வேலையில் கூட திருப்தி இருக்காது.

"சாப்பிட்டாயா?" "நலமுடன் இருக்கின்றாயா?" என்ற குறுந்தகவலாவது மனதிற்கு பிடித்தவர்களுக்கு அனுப்பிடுங்கள்.காரணம் இந்த இரண்டு வார்த்தைகளுக்காக ஏங்கும் மனது பல...

முடிந்த வரை மனதிற்கு கசப்பான சில விடயங்கள் இருக்குமானால் சம்மந்தப்பட்டவர்களிடம் உடனடியாக பிரச்சினைகளை பேசி தீர்வு காணுங்கள்.அது உங்களுக்கும் உங்கள் சிறப்பான வாழ்க்கைக்கும் நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top