பிரபல நடிகை ஒருவர் தேவாலயத்திற்குள் சென்று நிர்வாணமாகப் போஸ் கொடுத்தமை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பிரான்ஸில் பதிவாகியுள்ளது. குறித்த தேவாலயத்தில் வழிபாடுக்காகச் சென்ற நடிகை, அங்குள்ள குகை வாயில் ஒன்றின் முன்பாக சென்று தனது ஆடைகள் அனைத்தையும் களைத்துவிட்டு, நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து குறித்த நடிகை மீது உடனடியாக அவர்கள் துணியை வீசியுள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் குறித்த நடிகையை கைது செய்துள்ளதாக இந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.