Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
சதாவும் ஆபாசம் பேசுவாரா? - புதிய சிக்கல்

sooriyan gossip - சதாவும் ஆபாசம் பேசுவாரா? - புதிய சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,833 Views
Torchlight திரைப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகியாக வருகிறார் நடிகை சதா. 
ஜெயம், அந்நியன், பிரியசகி போன்ற படங்களில் சதாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது சதா தமிழில் மீண்டும் வருகிறார் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணாக.
 
இந்த நிலையில் இவரது மொத்தமாய் மாறுபட்ட, விபச்சார பெண்ணாக நடிப்பது தொடர்பில் அவர் தனது மனச்சுமையை இப்படி கொட்டி தீர்க்கிறார்.  
 
ஜெயம் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்திருந்தேன். இதில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி நடித்துவிட்டு மும்பை சென்றுவிட்டேன். ஆனால் ஜெயம் படம்மூலம் எனக்கு கிடைத்த வரவேற்புபற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. அதன் பின் வர்ணஜாலம், அந்நியன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த படங்களில் நான் கவர்ச்சி காட்சிகளில் தோன்றியதால்  
ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி. இது எனக்கு பிளஸ் ஆக இருந்ததா? இல்லையா? என்பதுபற்றி எனக்கு தெரியாது. 
 
ஆனால், கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடிக்க வேண்டியதுதான் நடிப்பு துறையில் மிகுந்த சவாலான விடயம். இது ஒரு குறிக்கோள்.  அப்படித்தான் நான் எனது கதாபாத்திரத்தை செலக்ட் செய்வேன். ஆனால் படம் வெற்றி பெற்றும் எனக்கு அதிக படவாய்ப்புகள் வரவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. 
 
அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? சதாவுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று இயக்குனர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். 
 
Torchlight படத்தில் நெடுஞ்சாலைகளில் நின்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணாக நடித்திருக்கிறேன். பல நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு அவர்கள் மறுத்திருக்கிறார்கள். என்னிடம் இயக்குனர் கூறியபோது முதலில் நானும் மறுத்தேன். முதலில் கதையை கேளுங்கள் என்றார். அதன் பின் நான்ஒரு முறை கதை கேட்கவில்லை. 3 முறை கேட்டேன். எனக்கு அழுகையே வந்து விட்டது. 
 
இதில் ஆபாசமாக வசனம் பேசி நடித்திருப்பதாக டிரெய்லர் பார்த்தவர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்த கதாபாத்திரம் என்ன பேசவேண்டுமோ அதைத்தான் நான் பேசி இருக்கிறேன். அதை எப்படி ஆபாசம் என்று கூறமுடியும்? என்று சதா அதாங்கபடுகிறார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top