Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
8 லட்சம் பேர் தற்கொலை - அதிர்ச்சி அறிக்கை.

sooriyan gossip - 8 லட்சம் பேர் தற்கொலை - அதிர்ச்சி அறிக்கை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
உலகம் முழுவதும் வருடம் தோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக, உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
குறித்த ஆய்வை, கடந்த 2016-ம் ஆண்டு, கனடாவின் மனநல ஆணையகத்துடன் இணைந்து, உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகளே இப்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் 
நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நிகழ்கின்றன. 
 
2016-ம் ஆண்டில் மட்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 15 வயது முதல் 29 வயது வரை உடையவர்கள் என்று, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு முயற்சியில் மரணத்தை தழுவதில்லை. 20 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கைவிட்ட நிலையிலும் பின்னர் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர் என்று, குறித்த ஆய்வு கூறுகிறது. 
 
குடும்பம், நண்பர்கள், சமூகம் போன்றனவற்றினால்   இழப்புகள், நிறைவேறாத ஆசை, உரிய  அன்பு கிடையாமை போன்ற காரணங்கள், தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 
 
அதுவும், தற்கொலை செய்து கொள்பவர்களில் 20  சதவீதமானோர் மதுவிற்கு அடிமை என்று கூறும் குறித்த அறிக்கை, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறுகிறது. 
 
இதேவேளை, அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் தற்கொலை செய்வதற்கு மனநல பிரச்சனையே முக்கிய காரணம் என்றும் கூறுகிறது. 
 
அத்துடன், பல நாடுகளில் தற்கொலை குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனை தடுப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அரசு அளவிலும், சமூக அளவிலும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வி, மனநல ஆலோசனை போன்றவற்றின் மூலம் தற்கொலையை பெரிய அளவில் தடுக்க முடியும்.
 
இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top