Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
ஜோதிகா நடிப்பில் புதிய அறிவிப்பு

Sooriyan Gossip - ஜோதிகா நடிப்பில் புதிய அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
ஜோதிகா நடிப்பில் வெளிவரவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
சூர்யாவை திருமணம் செய்த பின்னர், நடிப்பிற்கு  இடைவெளி விட்டிருந்த ஜோதிகா, ‘'36 வயதினிலே’' என்ற படத்தின் மூலம் மீண்டும் படங்களை தரத்தொடங்கினார். 
 


இதனைத் தொடர்ந்து, ''மகளிர் மட்டும்'' மற்றும் ''நாச்சியார்'' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் நடிப்பில் ''செக்கச்சிவந்த வானம்'' மற்றும் ''காற்றின் மொழி'' ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. 
 
மணிரத்னம் இயக்கியுள்ள ''செக்கச்சிவந்த வானம்'' படத்தில், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக தோன்றுகிறார் ஜோதிகா. 
 
இந்த படத்தில் பிரபல்யங்கள் பலரும் நடிக்கிறார்கள்.
சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் போன்றோர் என அடுக்கிக் கொண்டே போகலாம். ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் பட்டாளம் நடித்த  ''செக்கச்சிவந்த வானம்'' எதிர்வரும்  27-ம் திகதி  வெளிவரவுள்ளது. 
 
அத்துடன் ‘காற்றின் மொழி’ திரை படத்திலும் ஜோதிகா  நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். ஆர்.ஜே.வாக ஜோதிகா நடித்திருக்கும் இந்தப் படம், அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 18-ம் திகதி வெளியிடப்படவுள்ளது. 
 
இந்த நிலையிலேயே அவருடைய அடுத்த படம் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கார்த்திக் ராஜுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய 
எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குநர் இந்த புதிய படத்தை இயக்குகிறார். 
 
படத்தின் பெயர், துணை நடிகர்கள்-  நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோரின் விபரங்கள்  இன்னும் வெளியாகவில்லை. இவை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 
 
எதிர்வரும் செப்டம்பர்மாதம்  ஜோதிகாவின் புதிய படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளமை கூடுதல் தகவல். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top