Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
ஈடு செய்ய முடியாத இனிய குரல் - பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா

Sooriyan Gossip - ஈடு செய்ய முடியாத இனிய குரல் - பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,713 Views
சைத்துறையில் தனித்துவமாய் இரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்க எல்லோராலும் முடிவதில்லை. ஒருசிலர் மட்டுமே காலத்தை வென்று கல்வெட்டாய் நின்று நிலைக்கிறார்கள். அப்படி ஒரு இனிய குரல்தான் பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா.

இசையை இரசிக்கும் எந்த ஜீவனாலும், இலகுவில் மறந்துவிட முடியாத குரல். மறைந்தாலும் மறையாது நம்மோடு ஜீவிக்கும் சுகமான குரல் இந்தக் குயிலினுடையது.
ஸ்வர்ணலதா என்னும் இந்த இசைக்குயில் எங்களை விட்டு மறைந்திருந்தாலும், அவரது ஞாபகத் தடங்களை பற்றி பேசி, அவரை மீண்டும் எங்களுக்குள் ஜீவிக்க வைப்பதில் சந்தோஷம். 

செப்டம்பர் 12 ஸ்வர்ணலதாவின் நினைவு தினம். 

அவர் எங்களை விட்டுப் பிரிந்து இன்றோடு 08 வருடங்கள் முடிந்து விட்டன. மீளாத்துயரில் அவரது இரசிகர்கள் மூழ்கிக்கிடந்தாலும், அவரது பாடல்கள் நமக்கான இளைப்பாறுதல். 

கேரளாவின் பாலக்காட்டில் 1973 ஏப்ரல் 29 அன்று ஜனனித்த இந்த இசைக்குயில், எம்.எஸ்.வி முன்னிலையில் ஒரு பழைய பாடலைப் பாடிக்காட்டி, தன் இசை வாழ்வை ஆரம்பித்தார். 

நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் இவர் பாடிய சின்ன சிறு கிளியே கண்ணம்மா '' பாடல் இவருக்கு இசைத்துறையில் அகரமிட்டாலும், ஏனோ அந்தப் பாடல் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புக்களைக் கொடுக்கவில்லை. 

பலத்த எதிர்பார்ப்போடு மலர காத்திருந்த ஸ்வர்ணலதா, வாய்ப்புக்கள் கதவைத் தட்டவில்லை என்பதைக் கண்டு  தளரவில்லை. மீண்டும் முயல்கிறார். அந்த முயற்சி கைமேல் பலனைக் கொடுத்தது என்பது சிறப்பு. 

ஆம்!
அதுதான் மாலையில் யாரோ மனதோடு பேச பாடலின் வெற்றி. சத்திரியன் திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இவர் பாடிய அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் அம்மையாரின் குரலையும் தனித்துவ இசைப் புலமையையும் அப்பட்டமாய் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இரண்டு வருடங்கள் கதவைத் தட்டாத வாய்ப்புக்களெல்லாம் ஒரே நேரத்தில் வந்து குவியத்தொடங்கியது. 

பல மொழிகளில், பல வெற்றித் திரைப்படங்களில், பலவிதமான பாடல்களைக் கொடுப்பதற்கு பல இசையமைப்பாளர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆரம்பித்தது ஸ்வர்ணலதாவின் இசைப் பயணம். 

தமிழ் கடந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலையாளம்., ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம், உருது, பகடி, ஒரியா என நாம் அறியாத மொழிகளிலெல்லாம் பாடித்  தீர்த்தது இந்தக் குயில். 

அதாவது, மூன்று தலைமுறைக்கு பாடல்களை இரசிக்க, தெவிட்ட தெவிட்ட கொடுத்த இசைப்பூ இவர்.

இந்தப் பூவின் இராகங்களோடு நாளை ஆரம்பித்து, இரவுவரை நீடித்துக்கொண்ட இரசிகர்கள் ஏராளம். அத்தனை சக்தி இவரது குரலுக்கு உண்டு என்பதும் சிறப்பு. 

இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், எஸ்.ஏ ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், தேனிசைத் தென்றல் தேவா, இன்னும் எத்தனையோ இசையமைப்பாளர்களின் ஆஸ்தான பாடகியாக வலம் வந்தவர் ஸ்வர்ணலதா. 

AR ரஹ்மான் இசையில் பாடி முதலாவதாக தேசிய விருதை பெற்றுக்கொண்ட பாடகி இவர்தான் என்பதும் கூடுதல் செய்தி. அதுமட்டுமின்றி, இவரது அசாத்திய குரல்வளம் மற்றும் புலமை இவரது பாடல்களை கூர்ந்து இரசிப்பதன்மூலம் அவதானிக்கலாம். 

போவோமா ஊர்கோலம் என்று பாடிய இந்தக் குரல்தான் அக்கடான்னு நாங்க உடை போட்டா என்றும் பாடியது. 

போறாளே பொன்னுத்தாயி என்று உருகிய இந்தக் குயில் தான், ஆட்டமா தேரோட்டமா என மேற்கத்தைய இசை ராகத்தில் அமைந்த பாடலையும் பாடியது. 

நீ எங்கே என் அன்பே, நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா, மாடத்திலே கன்னி மாடத்திலே, ஊரெல்லாம் உன் பாட்டுத்தான், மெல்லவே மெல்லவே மலர்ந்தேன், இரவுகளை உறங்க வைக்கவே, என்னுள்ளே என்னுள்ளே, ராசாவே உன்னை விட மாட்டேன், அடி ஆச மச்சான், சொல்லி விடு வெள்ளி நிலவே, ஆட்டமா தேரோட்டமா, போறாளே பொன்னுத்தாயி, எவனோ ஒருவன், மாயா மச்சிந்தா, ஹே ராமா, அஞ்சாதே ஜீவா, நீதானே நாள்தோறும், அன்பே கண்களாலே, என்னைத் தொட்டு, செவ்வந்தி பூவுக்கும், குயில் பாட்டு, காதல் கடிதம், காதலெனும் தேர்வெழுதி... இப்படி இவரது பாடல்களை வரிசைப்படுத்த முடியாதளவுக்கு நிறைந்து கிடைக்கும் பாடல்கள் ஏராளம். 

மொத்தமாக 7 ,000 பாடல்களுக்கும் அதிகமாக பாடியுள்ள ஸ்வர்ணலதா, ஏன் அவசரமாக எங்களை விட்டுப் போனார் என்பது இன்னும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கேள்விதான். 

ஒருவேளை, இறைவனுக்கும் இந்தக் குரல் பிடித்துப் போனதால் தான், விரைந்து தன் அருகில் அழைத்துக்கொண்டானோ என்னவோ..

பாடல்களை உணர்ந்து தனித்துவம் மாறாமல், அழகு சேர்த்து இன்னும் இனிமையாய் மாற்றிப்பாடும் திறமை இவருக்கு ஒரு தனித்துவம் எனலாம். 

இசையுலகில் இரண்டு அசைக்க முடியாத ஜாம்பவான்கள் இளையராஜா, ரஹ்மான். இவர்கள் பெருவாரியாய் பயன்படுத்திய குரல் ஸ்வர்ணலதாவினுடையது என்பதும் இவரது இரசிகர்கள் என்பதில் நமக்கும் பெருமை. 

2010 இல் பாடிக்கொண்டிருந்த இந்தக் குயில் பாதியில் நம்மை விட்டுப் பறந்தது. 

சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை காரணமாக, மருத்துவமனையில் இருக்கும்போதே எம்மைவிட்டு பிரிந்து போனது இந்த அன்புக்கு குயில். 

இசை மட்டுமே எனக்கு தெரிந்தது என்று வெளிப்படையாக கூறிவந்த ஸ்வர்ணலதா உண்மையில், இசைக்காகவே பிறந்து இசைக்காகவே வாழ்ந்து, அந்த இசையோடு தன்னை முடித்துக் கொண்டார். 

இசை தவிர வேறு எந்த இடத்திலும், ஸ்வர்ணலதா தன்னை நிலைப்படுத்தியது இல்லை. இசை மட்டுமே தன் வாழ்வாக வாழ்ந்து இசையோடு பறந்து போனார். 

காலங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தப் பாடகி, என்றும் எம் மனங்களில் நினைவுகளாலும் அவரது குரலிசையாலும் வாழ்ந்துகொண்டேயிருப்பார். 

மறைந்தும் மறையாத இந்தக் குயிலுக்கு, இரசிகர்களோடு சேர்ந்து சூரியனும் வருடாவருடம் நினைவுப் பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கிறான். 

-இராமசாமி ரமேஷ்-
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top