Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
ஏ.ஆர்.முருகதாஸ் நடிப்பில் வருகிறது..............

Sooriyan Gossip - ஏ.ஆர்.முருகதாஸ் நடிப்பில் வருகிறது..............Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,260 Views
விஜய் தேவரகொண்டா நடித்துவரும் ''நோட்டா'' படத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற ஸ்பெஷல் தகவலும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.  
 

தெலுங்குப் படங்களின் மூலம் புகழ் பெற்றவர், விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் தனது முதலாவது படமான 
 ‘நோட்டா’ வில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஆனந்த் சங்கர் முன்னதாக ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ போன்ற படங்களை இயக்கியவரே. 
 
இதில் முக்கியமான  மற்றுமொரு விடயம் என்னவென்றால்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் தேவரகொண்டா, அவரையே சிறப்பு தோற்றத்தில் வர வைத்து விட்டார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘நோட்டா’ படத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். அத்துடன் நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 
 
‘நோட்டா’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 
 
இந்நிலையில், இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவரை இயக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் சங்கர், ‘என்னவொரு மகிழ்ச்சிகரமான தருணம். நடிகராக என் இயக்குநரை இன்று இயக்கினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனந்த் சங்கர் இயக்கிவரும் ‘நோட்டா’ படமும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய  ‘சர்கார்’ படம் போன்றே, அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளமை விசேட தகவலாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top