Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
விநாயகர் சதுர்த்தி விரதமும் கொண்டாட்டமும் - ஒரு பார்வை

Sooriyan Gossip - விநாயகர் சதுர்த்தி விரதமும் கொண்டாட்டமும் - ஒரு பார்வைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,087 Views
ந்துக்கள் செறிந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய தினம் பக்தியுடன் கூடிய ஒரு கொண்டாட்டமான நாள் இன்று. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைத் தியானித்து அமைதியாக விரதம் அனுஷ்டிக்கும் ஒரு சாராரும், பக்தியை ஆடல் பாடலுடன் கூடியதான உற்சாகமாக அனுஷ்டிக்கும் வழிபாட்டுமுறையை கொண்டவர்கள் இன்னொரு புறமுமாக விநாயகப்பெருமானை கொண்டாடிக் களிக்கின்றார்கள் இந்துக்கள்.

எமது நாடான இலங்கையைப் பொறுத்தவரைக்கும், விரதங்கள் அனைத்தும் அமைதியான முறையிலேயே இந்துக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றன. மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் அடக்கி, தியானத்தில் ஒருமுகப்படுத்தி, உணவைச் சுருக்கியேனும் விடுத்தேனும் விரதங்கள் நோற்கப்படுகின்றன. இந்த அமைதியான முறையிலேயே ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி விரதமும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

எமது நாட்டின் முறை இப்படியிருக்க, பல மொழிகள் பேசும் இந்து மக்கள் செறிந்து வாழும் 29 மாநிலங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், புனிதம் மிகுந்த விநாயகர் சதுர்த்தி விரதமானது ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. அதிலும், தமிழ் மொழி பேசும் மக்களின் மாநிலமான தமிழ்நாட்டை விடவும், வட மாநிலங்களில் வாழும் இந்து மக்களே விநாயகருக்கு பெருமெடுப்பில் விழா எடுத்து பண்டிகையைப் போல சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இன்றைய விநாயகர் சதூர்த்தி விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலை 4 மணியளவில் அனைத்து விநாயகர் கோயில்களிலும் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருவதுடன், அனைத்து இந்து கோயில்களிலும் அலங்காரங்களும், மகா தீபாராதனைகளும் இணைந்த விஷேடபூஜை வழிபாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கோயில்களில் இப்படியான விஷேட பூஜைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்க, தமது வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் கொண்டாட்டத்தை களைகட்ட வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் விநாயக பக்தர்கள். பிள்ளையாருக்கு மிக விருப்பமான கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல், பொரி, அவல், கடலை போன்ற நெய்வேத்தியங்களைப் படைத்து மகிழ்கின்றார்கள் அவர்கள்.

விநாயகர் சதுர்த்தி விரதம் என்றாலே முக்கியத்துவம் பெறுவது வித விதமான விநாயகப்பெருமானின் திருவுருவங்கள் தான். பக்தர்கள் தமக்குப் பிடித்தமான நிலையிலான விநாயகர் உருவங்களை வடிவமைத்து வணங்குகின்றார்கள் இந்நாட்களில். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் களிமண்ணினால் உருவாக்கப்பட்ட வடிவங்களே.

இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே, மண்ணில் தோற்றம் பெற்று இறுதியில் நீரில் கரைந்து மறைந்து விடுவதே இயற்கை. இந்தத் தத்துவத்தை உணர்த்தும் விதமாகவே, மண்ணினால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தையும் பூஜை வழிபாடுகள் முடிவுற்றவுடன், மங்கள வாத்திய முழக்கங்களுடன் நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று நீரில் சங்கமிக்கச் செய்வது மரபு.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top