Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
இப்படியும் ஒரு திருட்டா?

Sooriyan Gossip - இப்படியும் ஒரு திருட்டா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

560 Views
அமெரிக்காவின் பிலடெல்பியா பூச்சிகள் அருங்காட்சியகம் மற்றும் பட்டாம்பூச்சிகள் காட்சியகத்தில் இருந்த சுமார் 7,000 சிறு உயிரினங்களை, ஒருவர் சர்வ சாதாரணமாக திருடியமை காணொளி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

பலருக்கும் கரப்பான்பூச்சி, தேள், சிலந்தி போன்ற பூச்சி வகைகளை கண்டால் உடல் நடுங்கி ஊரையே கூப்பிட்டு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி விடுவார்கள்.
ஆனால் இதற்கு மாறாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஒருவர் சுமார்
7,000 பூச்சிகள், சிலந்திகள் மற்றும் பல்லிகள் போன்றனவற்றை அசால்ட்டா திருடியுள்ளார்.
இந்த திருட்டு காரணமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 80% உயிரினங்கள் களவுபோயுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய அருங்காட்சியக உரிமையாளர் ஜான் கேம்பிரிட்ஜ், ''முதலில் கண்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரினங்கள் காணாமற் போயுள்ளதை கண்டுகொண்டோம். இதன் பின்னர் உயிரினங்கள் சேமிப்பு அறையை பார்த்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே சிசிடிவி காணொளி பதிவுகளை ஆராய்ந்தோம். அப்போதுதான் களவு போன உயிரினங்களின் மொத்த விவரமும் தெரிந்தது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காணொளி காட்சிகள் தொடர்பில் விபரிக்கையில், சிசிடிவி வீடியோ பதிவில், ஊழியர்களின் சீருடை அணிந்து ஐந்து பேர் வருகின்றனர். ஒருவர் பெரிய ஐரோப்பியச் சிலந்திகளைப் பிடிக்கிறார். மற்றொருவர் தொட்டியைத் திறந்து சிலந்தியை எடுக்கிறார். அதைத் தன்னிடமுள்ள சிறிய பெட்டியில் போட்டுக்கொண்டு நடந்துசெல்கிறார்.

இந்த நிலையில் கண்காட்சி கூடத்திற்கு பார்வையாளர்கள் வருகின்றனர். வந்தவர்கள், ஊழியர்கள்போல வேலையைத் ஆரம்பிக்கின்றனர். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கொண்டுவந்த பெட்டிகளில் அனைத்து உயிரினங்களை ஒன்றாக அடைக்கின்றனர். அதன் பின்னர், அவசரகால வெளியேறும்வழி மூலமாக வெளியேறும் அவர்கள், தங்களின் சொந்த வாகனங்களில் செல்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த காணொளி காட்சிகளை வைத்து பார்க்கும் போது, ஜான் கேம்பிரிட்ஜ் தனது ஊழியர்கள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, இவ்வாறு களவாடப்பட்ட பூச்சிகளையும், புழுக்களையும் கொண்டுபோய் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதற்கு ஜான் கேம்பிரிட்ஜ் கூறிய தகவல்கள் ஆச்சரியத்துடன் அதிரவைக்கிறது. அருங்காட்சியகத்தில் காணாமல் போன உயிரினங்களின் ஒட்டுமொத்த மதிப்பு இலங்கை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.81 லட்சத்தைத் தொடும் என்று அவர் கூறுகிறார். அது மட்டுமன்றி இதுதான் உலகிலேயே அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருட்டு நடவடிக்கை என்று அவர் கூறினார்.

இந்த பாரிய திருட்டு காரணமாக குறித்த அருங்காட்சியகத்தில் உள்ள இரண்டு தளங்கள் மூடிய நிலையில் ஒன்று மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விரைவில் புதிய உயிரினங்களுடன் அருங்காட்சியகத்தை மீண்டும் உயிர்ப்பிப்போம் என்று ஜான் கேம்பிரிட்ஜ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top