Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
கொரிய தலைவர்கள் வெளியிட்ட முக்கியத்துவம் மிக்க அறிவிப்பு இதுதான்

Sooriyan Gossip - கொரிய தலைவர்கள் வெளியிட்ட முக்கியத்துவம் மிக்க அறிவிப்பு இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

889 Views
வடகொரியா தலைவர் சமீப காலமாக வெளியிட்டு வரும்  அறிவிப்புக்கள் உலக நாடுகளையே ஆச்சரியமாக திரும்ப பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கிறன.
இதுவரை நாட்களும் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வடகொரிய தலைவர் சந்தித்தமை, வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்தது.  
 
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்  அமெரிக்க தலைவரை சந்தித்தமை, முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு வார்த்தை நடத்தியமை அதன்பின் அந்த சந்திப்பின் வெற்றியாக வடகொரியா அதிபர் அணுவாயுதங்களை கைவிடுவதாக அறிவித்தமை அனைத்துமே வியப்பளிக்கும் சமாச்சாரமே. 
 
 
இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சம்மதம் தெரிவித்த விடயமே. 
 
இதுதொடர்பாக அமெரிக்காவுடன் வடகொரியா தலைவர் ஒப்பந்தம் ஒன்றில்  கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை. 
 
இதனால் வடகொரிய அதிபர்  செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் வலியுத்தி வருகிறது. 
 
இந்நிலையில், தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று வடகொரியா சென்றடைந்த அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் ஆலோசனை நடத்தினர்.
 
 இந்த ஆலோசனையின்போது தான் மிகவும் முக்கியத்துவம் மிக்க அறிவிப்பை அவர்கள் இருவருமாக  அறிவித்தனர். 
 
அந்த அறிவிப்பு,  கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமில்லா பிராந்தியமாக மாற்ற இருவரும் ஒப்புக்கொண்ட விடயமே. 
 
அத்துடன், 2032ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை இரு நாடுகளும் இணைந்து நடத்துவதற்கான அனுமதியை பெறவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. 
 
இந்த சந்திப்புக்கு பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, யோங்பயான் பகுதியில் உள்ள பிரதான அணுஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க, வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தென்கொரிய ஜனாதிபதி கூறினார். அமெரிக்காவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடகொரிய தலைவர் கூறினார். 
 
மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஏவுகணை சோதனை தளம் மற்றும் ஏவுதளத்தை வடகொரியா அழிக்கும் என்றும் இரு நாட்டின் தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top