இங்கிலாந்தை ஊடறுத்து வீசிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த காணொளி அனைவரையும் அதிர்ச்ச்சியடைய வைத்துள்ளது.
இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளை ஹெலன் என்ற புயல் தாக்கியது. அங்கு பாய்ந்தோடும் கம்பிரியா அருவியில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால் அருவி மேல்நோக்கி பாயத்தொடங்கியது. இந்த அதிசய சம்பவம் அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு அருவி சீறிபாய்ந்ததை கண்டதும் பெரும் அதிர்ச்சி.
அதே நேரம் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த புயல் காரணமாக பெரும் சேதங்களை சந்தித்துள்ளன.
அத்துடன் புயலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. .