Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
சர்கார் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் ; போட்டு உடைத்த ராதாரவி

Sooriyan Gossip - சர்கார் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் ; போட்டு உடைத்த ராதாரவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,466 Views
ர்கார் படத்தில் விஜய் உளவுத்துறையாக நடித்துள்ளார் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராதாரவி, பழ.கருப்பையா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 
மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக்கான சிம்டாங்காரன் என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 

இதற்கிடையில், பிரபல இணையதளத்திற்கு பேட்டியளித்த ராதாரவி கூறுகையில், சர்கார் படத்தில் மக்களின் பிரதிநிதியாக விஜய் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையுடன் நல்ல வேலை செய்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோயிசம் அதிகளவில் உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும், இதற்கு முன்னதாக வேலாயுதம் மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் உளவுத்துறை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் விஜய் நடித்திருப்பார். அதே போன்று ஒரு கதாபாத்திரத்தில் தான் விஜய் இப்படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால், சமுதாயத்தை சீர்திருத்த அமெரிக்காவில் இருந்து இந்திய நாட்டிற்கு வரும் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் என்று கூறுவது வெறும் வதந்தி மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top